'வோக்' அட்டையில் மிசேல்- லீக்!

பேஷன் பத்திரிக்கையான வோக்-கின் மார்ச் இதழுக்கான அட்டைப் படத்தில் மிசேல் ஒபாமா இடம் பெற்றுள்ளார். சோபாவில் சாய்ந்தபடி அவர் கொடுத்துள்ள போஸ்தான் மார்ச் மாத இதழின் அட்டைப்படமாகும்.
இந்த அட்டையுடன் கூடிய மார்ச் இதழ் நாளைதான் ரிலீஸாகிறது. ஆனால் இப்படம் நேற்றே இன்டர்நெட்டில் வெளியாகி வோக் பத்திரிக்கை நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அழகிய பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் பூஸ்சியா உடையில் காணப்படுகிறார் மிசேல்.
இந்த இதழின் உள்ளே எட்டுப் பக்கத்திற்கு மிசேல் குறித்த கட்டுரை இடம் பெற்றுள்ளது. முன்பு போல இப்போது உடை அணிய முடியாது. அதிபரின் மனைவி என்ற அந்தஸ்தும் சேர்ந்திருப்பதால் உடை விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டியிருப்பதாக தனது பேட்டியில் கூறியுள்ளார் மிசேல்.
அட்டைப் படத்திற்குப் போஸ் கொடுப்பதற்காக அணிய வேண்டிய உடையை மிச்சலே தேர்வு செய்தாராம். அவருக்கு டிரஸ் தேர்வு செய்வதில் நல்ல ஞானமிருப்பதாக மிச்சலைப் பேட்டி எடுத்த ஆன்ட்ரே லியோன் டாலி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











