twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்து ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும், என்று நடிகர் சூர்யா கூறினார்.

    By Shankar
    |

    Surya
    நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வாக்களித்தனர்.

    வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, "இந்த தேர்தலில் அதிக மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்குப்பதிவு செய்கின்றனர்.

    வரும் வழியில் எல்லா வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர். இது மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்து வரும் ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக அமைய வேண்டும்", என்று கூறினார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவர் தலைமையில்தான் சூர்யா - ஜோதிகா திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்

    நடிகர் அஜீத்தும், அவர் மனைவி ஷாலினியும் திருவான்மியூரில் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். நிறைய வாக்காளர்கள் இருந்ததால், வரிசையில் நீண்ட நேரம் நின்று பின்னர் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

    சினேகா

    தியாராகராய நகரில் உள்ள கேசரி தனியார் பள்ளி ஒன்றில் நடிகை சினேகா தனது வாக்கைச் செலுத்தினார்.

    English summary
    Actor Surya told that a corruption free rule would be come in the state. He told this after casting his vote in Chennai. Actors Ajith, Sneha also casted their votes today in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X