twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 6 ல் தொடக்கம்..மனோரமா, பாலச்சந்தருக்கு அஞ்சலி!

    By Manjula
    |

    சென்னை: சென்னையில் வருகின்ற 6 ம் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. 6 ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை மொத்தம் 8 நாட்கள் இந்த விழா நடைபெறுகின்றது.

    இதில் திரையிடுவதற்கு தமிழ்த் திரையுலகில் இருந்து மொத்தம் 12 திரைப்படங்கள் தேர்வாகி இருக்கின்றன. ஜோதிகாவின் 36 வயதினிலே, மிஷ்கினின் பிசாசு, ஜெயம் ரவியின் தனி ஒருவன், நயன்தாராவின் மாயா, விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய், விக்ராந்தின் தாக்க தாக்க, பாபி சிம்ஹாவின் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, கதிரின் கிருமி,சார்லஸ் ஷபிக் கார்த்திகா, கோடைமழை, ரேடியோ பெட்டி மற்றும் ஓட்டதூதுவன் - 1854 போன்ற படங்கள் இங்கே திரையிடப் படவுள்ளன.

    13th Chennai International Film Festival Start in January 6

    இந்த 12 படங்களில் நயன்தாரா நடித்த மாயா, தனி ஒருவன் ஆகிய 2 படங்கள் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் உலகின் அதிசிறந்த 123 படங்கள், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட 16 படங்கள் மற்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதுகளைப் பெற்ற திரைப்படங்களும் திரையிடப்பட்ட உள்ளன.

    இந்த விழாவில் மறைந்த இயக்குநர் பாலச்சந்தர், ஆச்சி மனோரமா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அச்சமில்லை அச்சமில்லை, அக்னி சாட்சி, ஒரு வீடு இரு வாசல், உன்னால் முடியும் தம்பி, சிந்து பைரவி, மேஜர் சந்திரகாந்த், மற்றும் அவள் ஒரு தொடர்கதை ஆகிய படங்களையும் விழாக்குழுவினர் திரையிடுகின்றனர்.

    இந்த விழாவில் உலகெங்கும் உள்ள 57 நாடுகளில் இருந்து மொத்தம் 184 படங்கள் திரையிடப்பட்ட உள்ளன.மொத்தத்தில் சென்னை திரைப்பட விழா சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தலை வாழை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    English summary
    13th Chennai International Film Festival starts From January 6 in Chennai.12 Tamil Movies will be Screened on the Film Festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X