“பில்லா“ 13 ஆண்டுகள் கொண்டாட்டம்..ட்விட்டரில் தல ரசிகர்களின் தெறிக்கும் ஹாஸ்டாக்!

சென்னை: அஜித், நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் பில்லா.

இயக்குனர் விஷ்ணு வரதன் இந்த படத்தை இயக்கி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

டிசம்பர் 14ம் தேதியான இன்று பில்லா படம் வெளியாகி 13 வருடம் நிறைவடைகிறது. இதை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற படம்

அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற படம்

நடிகர் அஜித் பில்லா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இதற்கு முன்னர் வாலி, அட்டகாசம், சிட்டிசன், வில்லன், வரலாறு, படங்களில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தாலும் பில்லா படத்தில் வில்லத்தனமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்தார். பில்லா படம் அஜித்தின் நடிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற படமும் கூட.

அனல் பறக்கும் தயாரிப்பு

அனல் பறக்கும் தயாரிப்பு

1978ம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படம் டான். அதை தமிழில் 1980ம் ஆண்டு பில்லா என்று மறு ஆக்கம் செய்ய ரஜினிகாந்த் நடிப்பில் பட்டையை கிளப்பியது. இந்த படங்களுடைய மறு தொடக்கம் தான் அஜித் நடிப்பில் வெளியான பில்லா. மறு தொடக்கமாக இருந்தாலும் இயக்கம், இசை, ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு படத்தின் நடிகர்கள் கூட்டணி பில்லா படத்தை சிறந்த வெற்றி படமாக்க வழிவகுத்தது.

பல விருதுகள்

பல விருதுகள்

இந்த படத்தில் அஜித்தின் நடிப்பு பலரையும் கவர்ந்தது போல நயன்தாராவின் நடிப்பும் பலரின் பாராட்டுக்களை பெற்றது. இந்த படத்திற்காக அஜித் & நயன்தாரா தமிழ் சினிமா சார்பாக FilmFare சிறந்த நடிகர் & நடிகை விருதுக்கு தகுதி பெற்றனர்.

ட்விட்டரில் ட்ரெண்டிங்

ட்விட்டரில் ட்ரெண்டிங்

நீண்ட நாட்களாக வலிமை படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கி காத்துள்ள அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வலிமை படத்தின் அப்டேட் இல்லாததால் #13YearsOfClassyDonBilla என்ற ஹாஸ்டாக்-ஐ அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X