சக்தி சிதம்பரம் மீது ரூ 35 லட்சம் மோசடி வழக்கு

By Sudha

Hemamalini and Sundar C
பிரபல சினிமா தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் மீது மதுரை நீதிமன்றத்தில் ரூ 35.50 லட்சம் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குரு - சிஷ்யன் படம் வெளியிட்டதில் அவர் செய்த மோசடி இது என மதுரையைச் சேரிந்த பிரபாகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மதுரை, தானப்பமுதலி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:

மதுரை, தானப்பமுதலி தெருவில், உதயம் பிக்சர் எனும் பெயரில், திரைப்படங்களை வெளியிட்டு வருகிறேன். சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் சக்தி சிதம்பரம். இவர், "சினிமா பாரடைஸ் எனும் பெயரில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவரும், நானும், சுந்தர் சி நடித்த, "குரு-சிஷ்யன் சினிமாவை மதுரை, ராமநாதபுரத்தில் வெளியிட, 42 லட்சம் ரூபாய் பேசி, கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டோம்.

இதன்படி, 2010 மே மாதம் 1ல், மதுரை, ராமநாதபுரம் உட்பட பல்வேறு தியேட்டர்களில் குரு-சிஷ்யன் வெளியிடப்பட்டது. ஒப்பந்தப்படி, 35 லட்சத்து 49 ஆயிரத்து 840 ரூபாய் பாக்கியை சக்தி சிதம்பரம் தர வேண்டும். பணத்தை கொடுக்காமல் தாமதம் செய்தார். 2010 அக்டோபர் 25ல், மதுரை, ராமநாதபுரம் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தில் முறையிட்டேன். எனினும், பணத்தை கொடுக்கவில்லை.

மதுரையில் என்னை சந்தித்த சக்தி சிதம்பரம், சங்கத்தில் புகார் செய்ய வேண்டாம் எனவும், கடனுக்காக நடிகர் விஜய் நடித்த, "காவலன் சினிமாவை தருவதாகவும் கூறினார். பின், காவலன் சினிமாவை எனக்கு தராமலும், கடனை தராமலும் மோசடி செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், 2010 நவ., 12ல் புகார் கூறினேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. சக்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி, சக்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X