தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி: நடிகர் சரவணன்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வாலாஜாபாத் ஒன்றியம் சின்னிவாக்கம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு வாலாஜாபாத் ஒன்றியச் செயலாளர் பா.கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் சரவணன் பேசியதாவது,
தாறுமாறாக உயர்ந்துள்ள விலைவாசியால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி வெறுவது நிச்சயம். தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி தான் மலரும். அதற்கான பணிகளை அதிமுகவினர் தற்போதே தொடங்க வேண்டும். பொது மக்களை நேரில் சந்தித்து நம் கட்சிக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்றார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஊத்துக்காடு, வாரணவாசி, அத்தி வாக்கம் போன்ற அனைத்து இடங்களிலும் நடந்தன. விழாவில் சின்னிவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் சத்தியா, மாவட்ட துணைச்செயலாளர் அத்திவாக்கம் ரமேஷ், வள்ளி நாயகம், சோமசுந்தரம், அக்ரி நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











