twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'விவேக்குக்கு பத்மஸ்ரீ-திரும்ப பெற வேண்டும்'

    |

    Vivek and Chaya Singh
    நாட்டின் உயர்ந்த சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள நடிகர் விவேக் அந்த விருதுக்கு தகுதியில்லாமல் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பொது மேடைகளில் பேசி வருவதால் அவரிடமிருந்து அந்த விருதைத் திரும்பப் பெற வேண்டும் என சினிமா பிரஸ் கிளப் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    அத்துடன் விவேக்கின் ஆபாசப் பேச்சு அடங்கிய சிடி மற்றும் அவரது மோசமான நடத்தைக்குரிய ஆதாரங்களுடன் பத்மஸ்ரீ விருது கமிட்டிக்கு புகார் மனுவும் அனுப்பியுள்ளது.

    சினிமா பிரஸ் கிளப் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ராவணன், தலைவர் சக்திவேல் தலைமையிலும், பொதுச்செயலாளர் எம்.பி.ஆபிரகாம் லிங்கன் முன்னிலையிலும் நடைபெற்றது.

    திரையுலகினால் கடுமையான அவமரியாதைக்கு உட்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களின் உணர்வுகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

    நாளிதழ் ஒன்றில் திரையுலகினர் பற்றி வந்த செய்தியால் திரையுலகினர் குறிப்பாக சம்மந்தப்பட்ட நடிகைகள் மன வருத்தத்தை சினிமா பிரஸ் கிளப் புரிந்து கொள்கிறது. இதுதொடர்பாக 7.10.09 அன்று நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் திரையுலகில் மதிப்பு மிக்க இடத்தில் இருக்கும் சத்யராஜ், சூர்யா, விவேக், சேரன், ஸ்ரீபிரியா மற்றும் விஜயகுமார் ஆகியோர் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்திப் பேசியது எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு சினிமா பிரஸ் கிளப் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

    எங்கள் உறுப்பினர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இனி நடைபெறும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் சம்மந்தப்பட்டவர்கள் தரும் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்வதில்லை என சங்கம் தீர்மானித்துள்ளது.

    பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய விவேக், சேரன், சூர்யா, சத்யராஜ், விஜயகுமார் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் தொடர்பான செய்திகள் புறக்கணிப்பது தொடர்பாக அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும், உரிமையாளர்களையும் சந்தித்து வேண்டுகோள் வைப்பது.

    இந்தப் பிரச்சனை தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் சென்னை பிரஸ் கிளப், சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் உள்ளிட்ட பத்திரிகையாளர் கூட்டுக்குழு நடவடிக்கைகளுக்கு சினிமா பிரஸ் கிளப் முழு ஆதரவு தெரிவிக்கிறது.

    நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் விவேக் அந்த விருதின் தன்மையையும், கெளரவத்தையும் சீர்குலைக்கும் வகையில் பொது நிகழ்ச்சியில் பேசியிருப்பதையும், அவருடைய திரைப்படங்களில் ஊனமுற்றோர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி வசனம் பேசி வருவதையும் மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி, அந்த விருதை திரும்பப் பெற வேண்டுகோள் வைப்பது" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X