நம்பியார் - நாகேஷுக்கு நடிகர் சங்கம் அஞ்சலி!

இதுகுறித்து திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் இணைந்து வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்:
தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் தொடங்கி இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து சாதனை புரிந்த பழம்பெரும் நடிகர்களான எம்.என்.நம்பியார், நாகேஷ் ஆகியோருக்கு திரைப்பட சங்கங்கள் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
வரும் பிப்ரவரி 21ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அஞ்சலி கூட்டத்தில் முன்னணி நடிகர்-நடிகைகள், தயாரிப்பாளர் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட அனைத்துத் திரைப்பட சங்கத்தினரும் கலந்துகொள்கிறார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
அஞ்சலி எம்ஜிஆர் சினிமா தமிழ் நடிகர் சங்கம் நம்பியார் நாகேஷ் cinema homage nadigar sangam nagesh nambiyar producer council


Click it and Unblock the Notifications