2013-ன் கடைசி மாதம்... ரிலீசுக்கு தயாராக உள்ள 14 படங்கள்!

By Shankar

சென்னை: இந்த ஆண்டின் கடைசி மாதம் இது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் ரிலீசாகத் திட்டமிட்டுள்ள படங்களின் எண்ணிக்கை 14. இவற்றில் சில பெரிய படங்களும் உண்டு.

ஆனால் திட்டமிட்டபடி 14 படங்களும் ரிலீசாவது நிச்சயம்தானா என்பது அந்தந்த வாரத்தின் வெள்ளிக்கிழமைக்கு 24 மணிநேரத்துக்கு முன்புதான் உறுதியாகின்றது.

தகராறு

தகராறு

வருகிற 6-ந்தேதி ஈகோ, தகராறு, வெள்ளை தேசத்தின் இதயம், கல்யாண சமையல் சாதம் ஆகிய 4 படங்கள் ரிலீசாகின்றன. கல்யாண சமையல் சாதம் படத்தில் பிரசன்னாவும், தகராறு படத்தில் அருள்நிதியும் நாயகனாக நடித்துள்ளனர். இவற்றில் ஓரளவு எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக உள்ளது தகராறு.

மதயானைக் கூட்டம்

மதயானைக் கூட்டம்

வருகிற 13-ந்தேதி இவன் வேற மாதிரி, மாலினி 22 பாளையங்கோட்டை, மதயானை கூட்டம் ஆகிய 3 படங்கள் ரிலீசாகின்றன. மாலினி 22 பாளையங்கோட்டை படத்தை ஸ்ரீப்ரியா இயக்கி உள்ளார். இவன் வேற மாதிரி படத்தில் பிரபுமகன் விக்ரம்பிரபு நாயகனாக நடித்துள்ளார். மதயானைக் கூட்டம் ஜிவி பிரகாஷின் சொந்தப் படம். விக்ரம் சுகுமாறன் இயக்கியுள்ள இந்தப் படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்குரியதாக உள்ளது.

பிரியாணி

பிரியாணி

வருகிற 20-ந்தேதி கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் பிரியாணி, ஜீவா, திரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை படங்கள் வருகின்றன. இவற்றில் என்றென்றும் புன்னகை மட்டும் இன்னும் எந்த பப்ளிசிட்டியும் இல்லாமல் அமைதி காக்கிறது.

தலைமுறைகள்

தலைமுறைகள்

இதே 20-ம் தேதிதான் சேரன் இயக்கும் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை, தலைமுறைகள், விழா போன்ற படங்களும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தலைமுறைகள் பாலுமகேந்திராவின் படம். மல்டிப்ளெக்ஸ்களை குறிவைத்து வருகிறது.

ரம்மி

ரம்மி

வருகிற 27-ந்தேதி விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி ரிலீசாகிறது. படத்தின் பாடல்கள் இனிமையாக உள்ளதாலும், விஜய் சேதுபதி படம் என்பதாலும் ஒரு சின்ன எதிர்ப்பார்ப்பு உள்ளது. கஞ்சா கருப்பு தயாரித்து நடிக்கும் வேல்முருகன் போர்வெல்ஸ் படமும் இதே தேதியில் வெளியாகிறது.

தியேட்டர் கிடைக்காமை

தியேட்டர் கிடைக்காமை

இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட 25-க்கும் மேற்பட்ட படங்கள் தியேட்டர் கிடைக்காமை, பைனான்ஸ் பிரச்சினைகள் காரணமாக அடுத்த ஆண்டு 2014-க்கு தள்ளிப் போடப்பட்டுள்ளன!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X