அஜய் தேவ்கன்-கஜோல் தம்பதிக்கு ஆண் குழந்தை-பெண் குழந்தை கனவு நிராசையானது
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கஜோலுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.
பாலிவுட்டில் வெற்றி நட்சத்திரமாகத் திகழ்பவர் நடிகை கஜோல். இவரது காதல் கணவர் அஜய் தேவ்கனும் பிரபல பாலிவுட் நடிகர். இவர்களுக்கு ஏற்கனவே நியாசா என்ற 7 வயது பெண் குழந்தை உள்ளது.
இரண்டாவது முறையாக கருவுற்ற கஜோல் நேற்று மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை 9.20 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தது போல் இரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று அன்மையில் கஜோல் தன் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அது கனவாகிப் போயுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications