இந்தியிலும் தசாவதாரம் ரிலீஸ்-ரசிகர்கள் உற்சாகம்

By Staff

Kamal
மும்பை: தமிழ், தெலுங்கைப் போலவே இந்தியிலும் தசாவதாரம் நேற்று வெளியிடப்பட்டது. மும்பையில் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் மிகப் பெறும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகெங்கும் திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட 1000 பிரிண்டுகளுடன் இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளுடன் படம் திரையிடப்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு வந்த படம் என்றாலும் கூட, கமல்ஹாசன் ரசிகர்கள் தொய்ந்து போய் விடவில்லை என்பதை நேற்று தியேட்டர்களில் அவர்கள் காட்டிய ஆர்வத்தின் மூலம் தெரிந்தது.

ரசிகர்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் படத்தை வரவற்க வேண்டும் என கமல்ஹாசன் உத்தரவிட்டிருந்தும் கூட, கமல் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை.

பாலாபிஷேகம், ஆரத்தி, சூடம் காட்டுவது என அமர்க்களப்படுத்தினர். பல தியேட்டர்களில், திரையில் தோன்றிய கமல்ஹாசனுக்கு ஆரத்தி
எடுத்தும் அசத்தினர்.

சென்னை மற்றும் புறநகர்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தசாவதாரம் திரையிடப்பட்டது. அனைத்து தியேட்டர்களிலும் நேற்று ஹவுஸ் புல் போர்டுகள் தொங்கின. இருப்பினும் தியேட்டர்கள் முன்பு ரசிகர் கூட்டம் அலை மோதியது.

படம் நன்றாக இருப்பதாகவும், 10 வேடங்களிலும் கமல்ஹாசன் அசத்தியிருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

மும்பையில் 27 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. இதுகுறித்து விநியோகஸ்தர் நம்பிராஜன் கூறுகையில், சப் டைட்டிலுடன் படத்ைத ரிலீஸ் செய்துள்ளோம்.

படம் சிறப்பாக வந்துள்ளது. ரசிகர்களும் பெரும் திரளாக படத்தைப் பார்த்த வண்ணம் உள்ளனர். கமல்ஹாசனின் 10 வேடங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வணிக ரீதியாகவும் பூரண திருப்தியைக் கொடுத்துள்ளது தசாவதாரம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X