15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை.. பிரபல இயக்குநர் குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா

சென்னை: மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார் வீட்டில் 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என மொத்தம் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ரத்னகுமாரின் குடும்பம் கடந்த 20 நாட்களாக பெரும் கஷ்டத்தை அனுபவித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்னகுமார் பதிவிட்டுள்ள ட்வீட் பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

ஆடை பட இயக்குநர்

ஆடை பட இயக்குநர்

வைபவ், பிரியா பவானி சங்கர், இந்துஜா மற்றும் விவேக் பிரசன்னா நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். அடுத்ததாக அமலா பாலை வைத்து ஆடை எனும் படு போல்டான படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

மாஸ்டர் வசனகர்த்தா

மாஸ்டர் வசனகர்த்தா

ஆடை படத்திற்கு பிறகு தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார் ரத்னகுமார். மேலும், மாஸ்டர் படம் வெளியாகும் வரை சமூக வலைதளங்களில் அந்த படம் குறித்த அப்டேட்களை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் அப்டேட் கிங்காகவும் இவர் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

14 பேருக்கு கொரோனா

14 பேருக்கு கொரோனா

இந்நிலையில், இயக்குநர் ரத்னகுமாரின் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. "15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேறினர்." என பதிவிட்டுள்ளார்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

மேலும், "கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு " என குடும்பத்தில் கொரோனாவால் பாதித்த அனைவரும் நலமுடன் குணமடைந்த சந்தோஷ செய்தியையும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். ரத்னகுமார் அனுபவித்த வேதனையை அறிந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அடுத்த படத்திற்காக

அடுத்த படத்திற்காக

"மகிழ்ச்சி அண்ணா....இன்னும் கவனமாக இருங்கள்.. அடுத்த படைப்பிற்கான வேலையில் ஈடுபடுங்கள்.. காத்திருக்கிறோம் உங்கள் அடுத்த படத்திற்காக.. என்றும், தளபதி விஜய்யுடன் சீக்கிரமே ஒரு படம் பண்ணுங்க என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் இயக்குநர் ரத்னகுமாருக்கு ஆறுதல்களை கூறி தேற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X