பையனூர் சினிமா நகரில் வீடு கட்டும் பணி 2-ந் தேதி துவக்கம்! - ராம.நாராயணன்

By Chakra

Rama Narayanan
சென்னை: பையனூரில் அரசு அளித்துள்ள இடத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் பணி, அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி தொடங்கும் என்று ராம.நாராயணன் கூறினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் அவசர கூட்டம், சென்னை பிலிம்சேம்பர் தியேட்டரில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்துக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்கினார். கூட்டம் முடிந்தபின், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள், நடிகர்-நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக, சென்னையை அடுத்த பையனூரில் முதல்-அமைச்சர் கலைஞர், 96 ஏக்கர் நிலம் வழங்கியிருக்கிறார்.

அந்த இடத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஓட்டுரிமை உள்ள 750 தயாரிப்பாளர்களுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 10,500 பேருக்கும் வீடுகள் கட்டப்பட உள்ளன.

டிசம்பர் 2-ந் தேதி துவக்கம்

3 படுக்கை அறைகளை கொண்ட வீடுகள், 2 படுக்கை அறைகளை கொண்ட வீடுகள், ஒரு படுக்கை அறையை கொண்ட வீடுகள் என மூன்று வகையான வீடுகள் கட்டப்பட இருக்கிறது.

இதற்கான பணிகள், அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க விழாவை தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும் இணைந்து நடத்த இருக்கிறோம். வீடுகள் அனைத்தும் ஒரு ஆண்டு காலத்துக்குள் கட்டி முடிக்கப்படும்.

இதன் மூலம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஓட்டுரிமை உள்ள எல்லா பட அதிபர்களுக்கும் வீடுகள் கிடைக்கும். தயாரிப்பாளர்கள் வீடு கட்டுவதற்கு யூகோ வங்கி கடன் வழங்குகிறது.

சின்னத்திரை கலைஞர்கள் ஏற்கனவே வீடு கட்ட தொடங்கி விட்டார்கள். நடிகர்-நடிகைகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான அறிவிப்பை தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிடும்.

இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம் இந்திய திரைப்பட உலகுக்கே தமிழ் திரைப்பட உலகம் உதாரணமாக இருக்கும்,'' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X