3 இடியட்ஸ் நிறுத்தப்பட்டதா?-ஷங்கர் தரப்பில் விளக்கம்

இப்போது, படத்தை ஷங்கர் கைவிட்டுவிட்டார் என்று தெரிவித்து செய்தி வெளியானதில் பலருக்கும் அதிர்ச்சி.
இதுகுறித்து ஷங்கரின் மேலாளரிடம் விசாரித்தோம்.
"இதில் கொஞ்சமும் உண்மையில்லை. படத்தின் வேலைகள் படுவேகமாக நடந்து கொண்டுள்ளன. சூர்யா நடிக்கிறார் என்பது உண்மைதான். தமிழ் - தெலுங்கில் வெளியாகும் இந்தப் படத்தின் ஆரம்பம் குறித்து முறையாக அறிவிக்கப்படும்," என்றார்.
தமிழ் - தெலுங்கு இரண்டிலுமே சூர்யாதான் ஹீரோவாம். இலியானா நாயகியாக நடிக்கிறார். ஜீவா, ஸ்ரீகாந்த் மேலும் இரு நாயகர்களாக நடிக்கின்றனர்.
வரும் ஜனவரி 23-ம் தேதி ஊட்டியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











