தியாகராஜ பாகவதர் மனைவி மரணம்
பழம் பெரும் நடிகரும், அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார் நடிகருமான எம்.கே. தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜம்மாள் சென்னையில் மரணமடைந்தார்.
90 வயதாகும் ராஜம்மாள் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சரிவர வைத்தியம் செய்து கொள்ளக் கூட வசதியில்லாத நிலையில்இருந்து வந்தார் ராஜம்மாள்.
இந்த நிலையில் சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் ராஜம்மாள் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, துணை செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை கண்ணம்மாபேட்டை மயானத்தில் உடல் தகனம் நடக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications