twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    14 இயர்ஸ் ஆப் எவர் க்ரீன் "சில்லுன்னு ஒரு காதல்".. கொண்டாடும் காதலர்கள் !

    |

    சென்னை : சூர்யா, ஜோதிகா, பூமிகா போன்றோரின் நடிப்பில் உருவான "சில்லுனு ஒரு காதல்" திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது.

    2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அன்று முதல் இன்று வரை காதலர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத்தரப்பு மக்களையும் ரசிக்க வைத்து எவர்கிரீன் காதல் திரைப்படமாக நிலைத்து நிற்கிறது.

    இவ்வாறு ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கும் சில்லுனு ஒரு காதல் செப்டம்பர் 8ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்து நிலையில் இன்று இந்த திரைப்படம் 14 ஆண்டுகளை நிறைவு செய்து இன்றும் இளமையுடன் பலரது ஃபேவரிட் திரைப்படமாக நிலைத்து நிற்கிறது.

     கல்யாண மேட்டர் காரணமாமே.. காதலருடன் சீரியஸ் மோதலில் நடிகை.. சமாதான பஞ்சாயத்தில் சினிமா தோழிகள்! கல்யாண மேட்டர் காரணமாமே.. காதலருடன் சீரியஸ் மோதலில் நடிகை.. சமாதான பஞ்சாயத்தில் சினிமா தோழிகள்!

    சில்லுனு ஒரு காதல்

    சில்லுனு ஒரு காதல்

    தமிழ் சினிமாவில் காதலை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வந்து இருந்தாலும் சூர்யா நடிப்பில் வெளியான" சில்லுனு ஒரு காதல் " தனிச் சிறப்பை பெற்றுள்ளது. ஹீரோவின் திகட்டாத கல்லூரி காதல் மற்றும் வேறொரு பெண்ணுடன் கல்யாணத்திற்கு பின்பு குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்வது என இருவேறு கதைகளை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம் காதலர்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    முக்கியமான காரணம்

    முக்கியமான காரணம்

    அறிமுக இயக்குனர் கிருஷ்ணா இயக்கிய இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு முக்கியமான காரணம் படத்தின் பாடல்கள் என கூறலாம். அந்த அளவுக்கு ரசிகர்களின் இதயத்தை தொட்டது இந்த படத்தின் பாடல்கள்.

    வித்தியாசமான அனுபவத்தை

    வித்தியாசமான அனுபவத்தை

    முன்பே வா என் அன்பே வா, நியூயார்க் உரங்கும் நேரம், மச்சக்காரி, அவளுக்கென்ன அம்பாசமுத்திரம் என ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு விதத்தில் அமைந்திருந்த நிலையில் இந்த திரைப்படமும் மிக வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.

    அமைதியான ஐஷூ

    அமைதியான ஐஷூ

    கௌதம், ஐஸ்வர்யா, குந்தவி என மூன்று கதாபாத்திரங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் முதல்பாதியில், அடாவடித்தனமாக இருக்கும் கௌதமுக்கு, அடக்க ஒடுக்கமான அமைதியான பெண்ணான ஐஷூவிற்கும் இடையேயான காதல்கள் மோதல்கள் மற்றும் காதலர்களுக்கே உரித்தான சின்ன சின்ன ரசிக்கும்படியான டெலிபோன் உரையாடல்கள் என அனைத்தும் இயல்பில் நடக்கின்றதை போலவே காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் ரசிகர்கள் மிக எளிதில் அந்த கதாபாத்திரத்தினுள் ஒன்றி போயினர்.

    குழந்தைக்கு காதலியின் பெயர்

    குழந்தைக்கு காதலியின் பெயர்

    ஒரு கட்டத்தில் கௌதம், ஐஷூ காதல் இரு வீட்டாருக்கும் தெரிய அந்த காதல் முடிவுக்கு வருகிறது, பின் ஹீரோ வீட்டில் பார்த்த பெண்ணுடன்( குந்தவி) திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது காதலியான ஐஷூ-வின் பெயரையே ஹீரோ வைத்துள்ளார்.

    சந்திக்க வைக்கிறார்

    சந்திக்க வைக்கிறார்

    இவ்வாறு கௌதம் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையில் இருக்கின்ற பொழுது குந்தவி எதர்ச்சையாக கௌதமின் பழைய டைரியை பார்க்க அதில் கௌதம் ஐஸ்வர்யாவின் ஆழமான காதலைப் பற்றி தெரிய வர இவர்கள் இருவரையும் மீண்டும் சந்திக்க வைக்கிறார் குந்தவி.

    தூக்கி வைத்து கொண்டாடினர்

    தூக்கி வைத்து கொண்டாடினர்

    இவ்வாறு கணவனை புரிந்து கொண்ட மனைவி, மற்றும் காதலனை உயிருக்கு உயிராக காதலித்த காதலி என இயல்பாகவே ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் நடக்கின்ற இரு கதைகளை மிக அழகாகவும் தத்ரூபமாகவும் அனைவரும் ரசிக்கின்ற வகையிலும் உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர்.

    ரியல் ஜோடியாக

    ரியல் ஜோடியாக

    காதலின் ஆழத்தையும் புரிதலையும் மிக அற்புதமான காட்டி இருந்த திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிலையில், இந்தப் படம் வெளியான ஓரிரு நாட்களிலேயே ரீல் ஜோடியாக இருந்த சூர்யா மற்றும் ஜோதிகா ரியல் ஜோடியாக திருமண வாழ்க்கையில் இணைந்தனர். இவ்வாறு வெளியான இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இன்று வரை உள்ளது.

    கொண்டாடி வருகின்றனர்

    கொண்டாடி வருகின்றனர்

    இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு காலத்தால் அழியாத காதல் காவியமாக இன்று வரை நிலைத்து நிற்கும் "சில்லுனு ஒரு காதல்" திரைப்படம் வெளியாகி இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் ரசிகர்கள் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

    ட்விட்டர் பக்கத்தில்

    ட்விட்டர் பக்கத்தில்

    இப்படி ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடிவர இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் "14 இயர்ஸ் ஆப் சில்லுன்னு ஒரு காதல்" என நெகிழ்ந்து இந்த நாளைக் கொண்டாடியவாறு ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களுடன் கொண்டாடி வருகிறார்.

    English summary
    14 years of sillunu oru kaadhal Special
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X