twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுப்ரமணியபுரம் 14-ஆம் ஆண்டு..80-களின் மதுரையை காட்டியதற்கு பாராட்டு..வன்முறை காட்சிகளுக்கு விமர்சனம்

    |

    சென்னை: சசிகுமார் எனும் அற்புத இயக்குநர் நடிகர் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படம் 80 ஆம் ஆண்டு மதுரையை கண்முன்னே காட்டியது. படமாக்கத்துக்கு பாராட்டும், விமர்சனமும் ஒருசேர கிடைத்தது.

    படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அவரவர் பாத்திரத்தை அழகாக செய்தார்கள், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் என படம் விறுவிறுப்பாக நகர்ந்தது.

    14 ஆண்டுகள் ஆனாலும் சுப்ரமணியபுரம் திரைப்படம் இன்றும் ரசிக்கப்படுகிறது. தமிழ் சினிமா படங்களில் குறிப்பிடத்தக்க படத்தில் இதுவும் ஒன்று.

    அஜித் எப்பவும் அல்டிமேட் தான்...லண்டன் ஷாப்பிங்கில் அஜித் செய்த காரியம்...கொண்டாடும் ரசிகர்கள் அஜித் எப்பவும் அல்டிமேட் தான்...லண்டன் ஷாப்பிங்கில் அஜித் செய்த காரியம்...கொண்டாடும் ரசிகர்கள்

    பழைய கதைகளை சொல்லும் திறமை மிக்க இயக்குநர்கள்

    பழைய கதைகளை சொல்லும் திறமை மிக்க இயக்குநர்கள்

    தமிழ் சினிமாவில் திரைக்கதைக்கு எப்போதும் பஞ்சமில்லை, அதேபோல் பழைய கதையை சொல்லும் விதம் காட்சி அமைப்புகளில் கவனம் செலுத்தி படம் எடுப்பதில் தமிழ் திரைப்படம் எப்போதும் முத்திரைப்பதித்துள்ளது. சார்பட்டா பரம்பரை சமீபத்திய உதாரணம். இதேபோல் புதுமுக இயக்குநராக சசிகுமார் அறிமுகமான சுப்ரமணியபுரம் படமும் சிறந்த உதாரணமாக சொல்லலாம்.

    1980 ஆம் ஆண்டை கண் முன் காட்டிய திரைக்கதை, கலை இயக்கம்

    1980 ஆம் ஆண்டை கண் முன் காட்டிய திரைக்கதை, கலை இயக்கம்

    1980 ஆம் ஆண்டையும், அப்போதைய மதுரையையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுதியதற்கு அப்படத்திற்கு பெரும் பாராட்டு கிடைத்தது. உடையமைப்பு, பாடல்கள், வசனம், வாகனங்கள் என அனைத்திலும் கோட்டைவிடாமல் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப்படத்தைப்பார்த்து அந்தகாலத்து ஆட்கள் எல்லாம் அட அப்படியே எடுத்திருக்கிறாரே என பாராட்டினர்.

    அப்படியே கண்முன் மதுரையின் சம்பவங்கள்

    அப்படியே கண்முன் மதுரையின் சம்பவங்கள்

    படத்தின் கதை, கதாபாத்திரங்கள், கதைக்களம், அரசியல் பிரச்சினை, வேலையில்லாமல் திரியும் இளைஞர்கள், நட்பு, காதல், இடையிடையே காமெடி, கோயில் திருவிழா, திருவிழாவில் நடக்கும் கூத்துகள் என படம் முழுவதும் நகைச்சுவையுடன் நகர்வதும், அவ்வப்போது நடக்கும் சிறு சிறு சச்சரவுகள், அந்தகாலத்தில் தியேட்டரில் நடக்கும் தகராறுகள் என காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

    துரோகத்தால் வீழும் நண்பர் கூட்டம்

    துரோகத்தால் வீழும் நண்பர் கூட்டம்

    படம் சுவாரஸ்யமாக நகரும். ஜெய்யின் காதல் கண்களிரண்டும் பாடல் என நகரும்போது திடீரென அரசியல் பிரச்சினையில் நைசாக பாசத்தை மையப்படுத்தி சசிகுமார் நண்பர்கள் வட்டத்தை அரசியல் சிக்கலுக்குள் இழுத்துவிடுவார் சமுத்ரகனி, அதிகாலையில் நடக்கும் அரசியல் கொலை பின்னர் ஆதாயம் அடையும் சமுத்ரகனி கொலை செய்தவர்களை கண்டுக்கொள்ளாமல் விட துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோபம் சமுத்ரகனி பக்கம் திரும்பும்.

    அரசியலில் சிக்கி சீரழியும் இளைஞர்கள்

    அரசியலில் சிக்கி சீரழியும் இளைஞர்கள்

    அண்ணன் மகளை காதலிக்கும் ஜெய் ஒரு இடத்தில் எதிராளிகளிடம் சிக்கிக்கொண்டு மரண பயத்தை காட்டிட்டா பரமான்னு கதறும் இடம் அருமை. பழிக்கு பழி வாங்கும் படலம் வன்முறையாக மாற மீண்டும் நடக்கும் கொலை, தொடர் கொலை என மாற படம் இறுதிப்பகுதி முழுவதும் வன்முறைதான். அரசியலில் சிக்கி அப்பாவி இளைஞர்கள் வாழ்வையே தொலைப்பதுதான் கதை.

    Recommended Video

    Sasikumar 2022 ல அடுத்த படம் Direct பண்றேன் | Rajavamsam | Filmibeat Tamil
    யதார்த்தமான திரைப்படத்தின் தாக்கம் 14 ஆண்டுகளாக தொடர்கிறது

    யதார்த்தமான திரைப்படத்தின் தாக்கம் 14 ஆண்டுகளாக தொடர்கிறது

    முதல்காட்சியிலேயே சாதாரண நபர் கஞ்சா கருப்புவை கொல்லும் காட்சியிலிருந்து ஆரம்பிப்பது காட்சிக்கு காட்சி சுவாரஸ்யத்துடன் முதல்படத்தை இயக்கிய இயக்குநர் போல் இல்லை சசிகுமாரின் இயக்கம். ஜேம்ஸ் வசந்தனின் இசை படத்துக்கு பெரிய பலம். இப்படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் இப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதற்கு காரணம் யதார்த்தமான திரைக்கதையே என்றால் மிகையல்ல.

    English summary
    The Tamil movie Subramaniapuram, directed by director Sasikumar, showed Madurai in front of the audience's eyes in the year 80. The film received both praise and criticism.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X