எங்க ஏரியா உள்ள வராத.. வெறித்தனமான கேங்ஸ்டர் படம்.. டிரெண்டாகும் #14YearsOfEpicPudhupettai

சென்னை: "எங்க ஏரியா உள்ள வராத" என யுவன் இசையில் கொக்கி குமார் பாடி 14 வருஷம் ஆகுது. இன்னும் அந்த வெறித்தனமான கேங்ஸ்டர் ஏரியாவுக்குள் தமிழ் சினிமாவில் எந்தவொரு படமும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Recommended Video

Pudhupettai movie review | Pudhupettai movie explained

ஜீனியஸ் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சிநேகா, விஜய்சேதுபதி, அழகம் பெருமாள் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான படம் தான் புதுப்பேட்டை.

தர லோக்கலா ஒரு கேங்ஸ்டர் படம், அரசியல்வாதிகள் செய்யும் ரவுடித்தனம், அரசியல்வாதியாகவும் ரவுடி, கொலை செய்ய பயப்படாத கொக்கி குமார், வீட்டில் பாம் போட்டதும், அஞ்சி நடுங்கும் காட்சி என ஒவ்வொரு சீனையும் எபிக்காக படமாக்கி இருப்பார் செல்வராகவன்.

வெறித்தனமான டிரெண்டிங்

வெறித்தனமான டிரெண்டிங்

14 வருஷம் இல்லை, இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், கொக்கி குமார் ரசிகர்கள் புதுப்பேட்டை படத்தை இதே போலவே ஹாஷ்டேக் போட்டு வெறித்தனமாகவே டிரெண்ட் செய்து வருவார்கள். அதற்கு வொர்த்தான படம் தான் புதுப்பேட்டை. காதல் படங்களில் தனது கில்லாடி தனத்தை காட்டிய செல்வராகவும், ராவாகவும், ஒரு கல்ட் கேங்ஸ்டர் படத்தை எடுக்க முடியும் என நிரூபித்திருப்பார்.

கிங் மேக்கர்

கிங் மேக்கர்

தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு தோள் கொடுக்கும் தோழனாக திரைக்களமாடினார் மூத்த மகன் செல்வராகவன். தனது தம்பியை வைத்து, அப்பா இயக்கத்தில் செல்வராகவன் கதையில் உருவான துள்ளுவதோ இளமை படம் தமிழ் சினிமாவில் பரபரப்பை கிளப்பிய நிலையில், தொடர்ந்து தனுஷை சினிமாவில் அரசனாக மாற்றிய கிங் மேக்கர் தான் செல்வராகவன். புதுப்பேட்டை படத்தில் அப்பா கஸ்தூரி ராஜாவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

மகா நடிகன்

மகா நடிகன்

இந்த மூஞ்சியெல்லாம் நடிக்க வந்துடுச்சு என கிண்டல் செய்த கூட்டத்தை தனது சிறப்பான நடிப்பால் திணறடித்து, இழிவாக பேசிய வாய்களையே மகா நடிகன் என பாராட்ட வைத்தவர் தனுஷ். புதுப்பேட்டை படத்திற்கே இவருக்கு தேசிய விருது வழங்கியிருக்க வேண்டும் என ரசிகர்கள் இன்றும், வேதனைப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.

புதுப்பேட்டை 2

புதுப்பேட்டை 2

சமீபத்தில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் புதுப்பேட்டை 2 உருவாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டு, தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். புதுப்பேட்டை படம் ரிலீசான போது, அந்த படத்திற்கு வரவேற்பே இல்லை ஆனால், அதன் பிறகு தான் அந்த படத்தை பற்றிய புரிதல் தொடங்கி பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் வெறித்தனம்

வேற லெவல் வெறித்தனம்

புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தனது வெறித்தனமான நடிப்பால் வேற லெவல் நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் தனுஷ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேங்ஸ்டர் படமான ஜகமே தந்திரம் படத்தில் சுருளியாக இந்த சுள்ளான் எப்படி மிரட்டப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் எந்தளவுக்கு வெயிட்டிங்கோ, அதே அளவுக்கு கொக்கி குமாரை மீண்டும் பார்க்கவும் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X