இன்னும் ஏழை ஏழையாவே தான் இருக்கான்.. சிவாஜி படம் வந்து 14 வருஷம் ஆகுது #14YearsOfSivajiTheBoss

சென்னை: "Rich getting Richer.. Poor getting Poorer" சிவாஜி படத்தில் வந்த இந்த வசனத்துக்கு மட்டுமல்ல அந்த படத்திற்கும் 14 வயசு ஆகிடுச்சு. ஆனால், இன்னமும் ஏழை ஏழையாவே தான் இருக்கான்.

ராபின் ஹுட் (ஜென்டில்மேன்) கதையை கொஞ்சம் ஆல்டர் செய்து பிரம்மாண்ட கோணத்தில் காட்சிப்படுத்திய படம் தான் ஷங்கரின் சிவாஜி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வெள்ளையனாக காட்டிய இந்த படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை #14YearsOfSivajiTheBoss என்ற ஹாஷ்டேக் போட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏவிஎம் ட்வீட்

ஏவிஎம் ட்வீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், நடிகர் விவேக்கின் டைமிங் காமெடியில், இயக்குநர் ஷங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என அந்த படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் இருந்து போட்ட ட்வீட்டை தொடர்ந்து இந்த ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

வெள்ளைக்கார ரஜினி

வெள்ளைக்கார ரஜினி

கலரா இருக்கும் நடிகர்களை கருப்பாக மேக்கப் போட்டு பல படங்களில் நடிக்க வைத்துள்ளனர். உலக சினிமாவிலேயே முதன் முறையாக கருப்பு சிங்கம் ரஜினியை கலர்ஃபுல் வெள்ளைக்காரனாக சிஜி தொழில்நுட்பத்தை கொண்டு 14 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் ஷங்கர் மாற்றிக் காட்டியிருந்த மெகா பிளாக்பஸ்டர் படம் தான் சிவாஜி.

காசை சுண்டும் ஸ்டைல்

சிவாஜி படத்தில் வாயில் சிக்லெட்டை போடும் காட்சியாக இருக்கட்டும், ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டி விடும் காட்சியாக இருக்கட்டும் ரஜினிகாந்தின் ஸ்டைல் தனி கெத்து தான். கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என அவர் பேசிய பஞ்ச் வசனமும் பட்டையை கிளப்பியது.

ஸ்டைல் சாம்ராட்

பாபா படத்தில் ரஜினிகாந்த் தம் அடிக்கும் காட்சிக்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சிவாஜி படத்தில் சிகரெட் இல்லாமல் சிக்லெட்டை வைத்து அவர் செய்த ஸ்டைலை பார்த்து அகில உலக ரசிகர்களே அசந்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

புல்லட்டும் நெருங்காது

புவி ஈர்ப்பு விசையையே மாற்றி அமைக்கக் கூடிய சக்தி ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமே உண்டு. டெனெட் படத்தில் தான் குண்டு பின்னோக்கி செல்லுமா? அதுக்கு முன்னாடியே சிவாஜி பாடலில் எங்க ரஜினிகாந்தை பார்த்து பாய்ந்து வந்த குண்டு பின்னாடியே பம்மும் காட்சிகள் எல்லாம் வேற லெவல் வெறித்தனம்.

ரியல் சிவாஜி

இந்தியா அனைத்தும் கொண்ட வல்லரசு நாடாக மாற வேண்டும் என்கிற தனது கனவை இயக்குநர் ஷங்கர் சிவாஜி எனும் பிரம்மாண்ட படைப்பு மூலம் காட்டி இருந்தார். இங்கு எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்றால் இது போல ரியல் சிவாஜி வந்தால் தான் உண்டு என்று சொல்லும் நிலை இன்றும் இருக்கத்தான் செய்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X