இயக்குநர் சங்கத் தேர்தல்: பாரதிராஜா வெற்றி

By Staff

Bharathiraja and Kajal
இது பாரதிராஜாவின் சீஸன் போலிருக்கிறது. ஒரு பக்கம் அவரது பொம்மலாட்டம் திரைப்படத்தின் இமாலய வெற்றி, மறுபக்கம் இயக்குநர் சங்கத் தேர்தலில் அவருக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி!

நேற்ரு ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் 511 ஓட்டுகள் பெற்று பாரதிராஜா வெற்றி பெற்றார்.

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. சென்னையில் உள்ள ஃபிலிம் சேம்பர் கட்டிடத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.சி.சக்தி மற்றும் உதவி இயக்குனர் ஜாக்கிராஜ் ஆகிய மூவரும் போட்டியிட்டனர்.

ஓட்டுகள் மாலையில் எண்ணப்பட்ட நிலையில், பதிவான 669 ஓட்டுகளில் பாரதிராஜாவுக்கு 511 ஓட்டுகள் கிடைத்தன.

அவரை எதிர்த்து போட்டியிட்ட இயக்குனர் ஆர்.சி.சக்தி 148 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். மற்றொரு வேட்பாளரான ஜாக்கிராஜுக்கு 10 ஓட்டுகளே கிடைத்தன. இதைத் தொடர்ந்து 363 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாரதிராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பாரதிராஜாவின் வெற்றியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர் அவரது ஆதரவாளர்கள்.

செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 487 ஓட்டுகள் கிடைத்தன. பொருளாளராக ஆர்.சுந்தர்ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X