செலவு 2.5 கோடி... நஷ்டம் ரூ 8 கோடி: இயக்குநர் கிச்சாவின் 'தப்புக் கணக்கு'!

By Shankar

சமீபத்தில் வெளியான பவானி படம் நன்றாக ஓடுகிறதா இல்லையா என்ற கவலையை விட, அந்தப் படத்தின் இயக்குநர் கிச்சா சொல்லும் ஒரு அடேங்கப்பா கணக்கைக் கேட்டு ஆடிப்போயுள்ளனர் சினிமா வட்டாரத்தில்.

வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தை சினேகாவை வைத்து உல்டா பண்ணி பவானி ஐபிஎஸ் ஆக எடுத்தார் கிச்சா.

இந்தப் படத்துக்கு ஆன செலவு ரூ 2.5 கோடி. ஆனால் இந்தப் படத்தால் தனக்கு ரூ 8 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக எல்லோரிடமும் புலம்பி வருகிறாராம் கிச்சா.

அதெப்படி ரூ 2.5 கோடி செலவு செய்தது ரூ 8 கோடியாகக் குட்டிபோடும்... பைனான்ஸ் வட்டி காரணமா?

விசாரித்ததில், கிச்சாவின் பலே கணக்கு அம்பலத்துக்கு வந்துள்ளது.

பவானி படத்தை எடுக்கும் முன் கிச்சா எடுத்த தீ உள்ளிட்ட இரு படங்களால் ஏகத்துக்கு நஷ்டம். இத்தனைக்கும் தீ படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

இந்த நஷ்டக் கணக்கோடுதான் பவானி படத்தை எடுத்தார். மீண்டும் சன் பிக்சர்ஸிடம் இந்தப் படத்தை விற்க முயற்சித்துள்ளார். உங்கள் பழைய கடன் பாக்கியையெல்லாம் முடித்துவிட்டு படத்தைக் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம் என்று அவர்கள் உறுதியாக நிற்க, இவர் வேறு வழியில்லாமல் விநியோகஸ்தர்களிடம் பவானியை தள்ளியுள்ளார்.

இப்போது தனது பழைய கடனையும், பவானி செலவையும் சேர்த்து ரூ 8 கோடி நஷ்டம் என்று கூறிவருகிறாராம்.

இதில் திடுக்கிட்டுப் போனவர், பவானியின் நாயகியான சினேகாதான். இந்தப் படம் ஓரளவுக்கு ஓடினாவே போட்ட காசு வந்திடும். இவரோ அநியாயத்துக்கு 8 கோடி பத்து கோடி என ஏற்றிச் சொல்லி, நம்ம பேரை டேமேஜ் ஆக்கப் பார்க்கிறாரே என்று வருத்தப்படுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X