சினிமா தயாரிப்பாளர் வீட்டில் வேலைசெய்த இளம்பெண் தற்கொலை!
சென்னை: சினிமா தயாரிப்பாளர் வீட்டில் 'ஹோம் நர்ஸ்'ஆக வேலை பார்த்து வந்த இளம்பெண் பணியிடத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை அருகே திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் சிம்ரன் தோப்பினி (17). இவர் எழும்பூர் மார்ஷல் ரோட்டில் வசிக்கும் சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் நோய்வாய்ப்பட்ட வயதான தந்தையை கவனித்து கொள்ளும் பணியை செய்துவந்தார்.
நேற்று பகல் வேலை செய்து வந்த வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எழும்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சிம்ரன் அரசு வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரை காதலித்ததாக தெரிகிறது.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிம்ரனின் உறவினர்கள் அவரது காதலரை அடித்து உதைத்து விட்டனர். இந்நிலையில் நேற்று பகல் சிம்ரன் காதலருடன் செல்போனில் பேசியுள்ளார்.
அவர் தன்னை மறந்து விடும்படி கூறியதால் மனம் உடைந்த சிம்ரன் தான் வேலை பார்த்த வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











