வரதட்சணைக் கொடுமை புகாரின் பேரில் கன்னட நடிகர் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
ஆனந்த்தின் மனைவி பரணி பெங்களூர், தியாகராய நகர் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது திருமணத்தின்போது பெற்றோர் போட்ட நகைகள் அனைத்துயம் எனது கணவர் விற்றுத் தீர்த்து விட்டார். அது போதாதென்று தற்போது கூடுதலாக வரதட்சணை கேட்டு அடித்து சித்திரவதை செய்து வருகிறார்.
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் சித்திரவதை செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல், நடிகை ரம்யா பர்ணாவுடன் அவருக்குக் கள்ளத் தொடர்பு உள்ளது என்று கூறியிருந்தார்.
தனது புகாரில் ஆனந்த், அவரது தந்தை பத்ரய்யா, நடிகை ரம்யா பர்ணா ஆகியோரையும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து ஆனந்த்தை போலீஸார் கைது செய்தனர்.
நடிகர் ஆனந்த் நடிக்க வருவதற்கு முன்பு உதயா டிவியில் தொகுப்பாளராக இருந்து வந்தார். பரணியுடன் கடந்த ஆண்டுதான் அவருக்குத் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
More from Filmibeat
anand arrest கன்னட நடிகர் ஆனந்த் கர்நாடகா கைது வரதட்சணைக் கொடுமை dowry harassment kannada actor karnataka


Click it and Unblock the Notifications











