'மாஞ்சா வேலு' படத்துக்கு தடை நீக்கம்!

துணிச்சல் படத் தயாரிப்பாளர் டாக்டர் பி.காளிதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் அருண்விஜய் நடித்து, 21-ந் தேதி வெளியாக இருந்த மாஞ்சா வேலு படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், மாஞ்சா வேலு படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் மோகன் தாக்கல் செய்த பதில் மனு, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
டாக்டர் மோகன் சார்பில் ஆஜரான வக்கீல் ஜி.முருகேஷ்குமார், "இந்த வழக்கில், இரு படங்களின் தயாரிப்பாளர்கள் இடையே எந்த வித பணப் பரிவர்த்தனையும் கிடையாது. கோர்ட்டில் தவறான தகவல் கொடுத்து தடை உத்தரவு பெறப்பட்டு இருப்பதாக" வாதாடினார்.
வழக்கின் தன்மை அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்போவதாக நீதிபதி அறிவித்ததும், டாக்டர் காளிதாஸ் சார்பில் ஆஜரான வக்கீல் மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் மாஞ்சாவேலு படத்திற்கான தடை நீங்கியது.


Click it and Unblock the Notifications











