ஜெகன்மோகினிக்கு தடை இல்லை

தீபாவளிக்குத் திரைக்கு வருவதாக இருந்தது ஜெகன்மோகினி. இந்த நிலையில், அழகப்பன் என்ற விநியோகஸ்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், படத்தின் தயாரிப்பாளரான முரளி சினி ஆர்ட்ஸ் எனக்கு ரூ. 12.6 லட்சம் பாக்கி தர வேண்டும். அதைத் தரும் வரை படத்தைத் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து உயர்நீதி்மன்றம் படத்தைத் திரையிட தடை விதித்தது.
இந்த நிலையில், கோர்ட்டுக்கு வெளியே அழகப்பனுக்கும், முரளி சினி ஆர்ட்ஸுக்கும் இடையே சமரசமாகி விட்டது. அதேபோல இந்த நிறுவனத்தின் மீது நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரும் கூட சுமூகமாக பேசித் தீர்க்கப்பட்டு விட்டதாம்.
இதையடுத்து திட்டமிட்டபடி அக்டோபர் 17ம் தேதி படத்தை திரையிட தடையில்லை என்று கோர்ட் கூறி விட்டது. அதன்படி தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications