நெல்லையில் வீடு, வீடாக திருட்டு விசிடி விற்பனை
நெல்லை: நெல்லையில் பைக்கில் வீடு வீடாக சென்று திருட்டு விசிடி விற்பவர்களை கைது செய்ய சினிமா வினியோஸ்தர்கள் சங்கம் வலியுறுத்தியது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட சினிமா வினியோஸ்தரர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், திருட்டு விசிடி தயாரிப்பாளர்கள், விற்பனை செய்பவர்களை தண்டிக்கும் வகையில் அரசு சட்டம் இயற்றியது. போலீசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் திருட்டு விசிடி குறைந்துள்ளது.
எனினும் உள்ளூர், வெளியூர் பஸ்களில் சேனல்கள், மினி சினிமா, காமெடி, சூப்பர் பாடல்கள் என்ற போர்வையி்ல் புதிய படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுவதால் சினிமா தொழில் நலிவடைகிறது.
தூத்துக்குடி, கோவில்பட்டி, வள்ளியூர், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கேபிள் டிவிக்களில் புதிய படங்கள் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
தனியார், அரசு பஸ்களில் திருட்டு விசிடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. நெல்லையில் சிலர் வீடு வீடாக சென்று திருட்டு விசிடி விற்பனை செய்கின்றனர்.
திருட்டு விசிடி விற்பனையை தடுக்க வேண்டும். திருட்டு விற்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











