திரைத் துறை நலவாரியம்: சிவக்குமார்-குஷ்புவுக்கு பொறுப்பு

By Staff

Kushboo and Sivakumar
திரைப்படத் துறையினருக்கான நல வாரியத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் நடிகர் சிவக்குமார், நடிகை குஷ்பு ஆகியோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த அக்டோபர் மாதம் நடந்த அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் கருணாநிதி,

“தொழிலாளர் சமுதாயத்தின் நலன்களை உறுதிப்படுத்திடும் வகையில், அரசின் சார்பில் பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு, அந்த வாரியங்களின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழ்த் திரையுலக வளர்ச்சியிலும், அதன் வாழ்விலும் பல்வேறு நிலைகளில் தங்கள் உழைப்பை நாளும் அளித்திடும் கலையுலகத்தினரின் நலன்களுக்காகத் தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பிலும், தமிழ்த் திரையுலகின் சார்பிலும் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கையினை ஏற்று, தமிழக அரசு சின்னத் திரையினருக்கும் சேர்த்து “திரைப்படத் துறையினர் நலவாரியம்" ஒன்றினை புதிதாக உருவாக்கும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, இன்று திரைப்படத் துறையினர் நல வாரியத்தைப் அமைத்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்த வாரியத்தின் தலைவராக தமிழக செய்தித்துறை அமைச்சரும், உறுப்பினராக செய்தி மக்கள்தொடர்புத் துறை இயக்குனரும் இருப்பர்.

மேலும் அலுவல்சாரா உறுப்பினர்களாக, பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியம்,

நடிகர் சிவகுமார், நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் கோவை தம்பி, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். தென்னிந்திய நடிகர் சங்கப் பொருளாளர் வாகை சந்திரசேகர். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் அன்பாலாயா" பிரபாகரன், சின்னத்திரை தயாரிப்பாளர் சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் விடுதலை,

மேலும், செய்தித் துறை, நிதித்துறை, வருவாய்த் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகிய அரசுத் துறைகளின் செயலாளர்களும்; தொழிலாளர் நலத்துறை மற்றும் நிலநிர்வாகத் துறை ஆகிய துறைகளின் ஆணையர்களும் வாரியத்தின் அலுவல்சார் உறுப்பினர்களாக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X