twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "பீர் விற்கவாவது அனுமதி கொடுங்க!" - தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

    By Shankar
    |

    Beer
    சென்னை: மழைக்காலம், கிரிக்கெட் போன்ற சீஸன்களில் தியேட்டர்களில் கூட்டமே இருப்பதில்லை. எனவே டாஸ்மாக் கடை- பார் இணைந்த திரையரங்குகளாக இவற்றை மாற்றிக் கொள்ள அனுமதி தேவை என தமிழக அரசுக்கு தியேட்டர்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இன்றைய சூழலில் தமிழக திரையரங்குகளில் பெரும்பாலானவை குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்களை மீறி படங்களை சுயேச்சையாக திரையிட முடிவதில்லை.

    பெரிய ஸ்டார்கள் முதல் குட்டி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. க6 மாதங்கள் கழித்து ரிலீஸாகும் படங்களுக்கு இப்போதே தியேட்டர்களை புக் பண்ண வேண்டிய நிலை.

    அப்படியே கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணாலும் போதிய கூட்டமின்றி ஓரிரு வாரங்களில் அந்தப் படங்கள் தூக்கப்படுகின்றன.

    இன்னொரு பக்கம், உலகக் கோப்பை கிரிக்கெட் போன்ற நிகழ்வுகள் குறுக்கிடும்போதும் தியேட்டர்களில் கூட்டம் சுத்தமாகக் குறைந்துவிடுகிறதாம்.

    இந்தப் பிரச்சினையைச் சமாளித்து தியேட்டர்களில் வருவாய் குறையாமல் பார்த்துக் கொள்ள, தியேட்டருக்குள்ளேயே குறிப்பிட்ட சில மதுபானங்களை மட்டும் விற்பது போல டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்றும், பார் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர். பெங்களூரில் சில திரையரங்குகளில் பீர் விற்கப்படுகிறது. அதுபோலவாவது உரிமை தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    English summary
    The Tamil Nadu Theater Owners seeking permission from the govt to open Tasmac shops and Bars inside the theaters for getting good revenue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X