நயன்தாரா மீதான ஆபாச வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு!

அஜித் - நயன்தாரா நடித்த ஏகன் படம் கடந்த 2008ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்துக்காக திருவனந்தபுரம் நகரெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக இருந்ததாகக் கூறி திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நாகராஜ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், படத்தின் இயக்குநர் ராஜு சுந்தரம், ஆபாச போஸ் கொடுத்த நடிகை நயன்தாரா, தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
ஆனால் போலீசார் இந்த வழக்கில் ஆதாரங்கள் சரியாக கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கை முடித்து விட்டனர். இதையடுத்து முதலில் வழக்கு தொடர்ந்த நாகராஜ் மீண்டும் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.
More from Filmibeat
abusive posters aegan movie ஆபாச போஸ்டர் வழக்கு திருவனந்தபுரம் நீதிமன்றம் நயன்தாரா மீண்டும் விசாரணை nayanthara case trivandrum court


Click it and Unblock the Notifications











