'காதல் அரங்கத்திற்கு' பச்சைக் கொடி

பெங்களூரைச் சேர்ந்த ஷெர்லி தாஸ் நாயகியாக நடிக்க, வேலு பிரபாகரனின் நடிப்பு, தயாரிப்பு, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காதல் அரங்கம்.
படத்தில் ஷெர்லி தாஸ் சில காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளார். இவற்றையெல்லாம் நீக்கினால்தான் சான்றிதழ் தர முடியும் என சென்சார் போர்டு கூறி விட்டது. ஆனால் நீக்க முடியாது என்று வேலு பிரபாகரன் பிடிவாதமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் இறங்கி வந்துள்ள பிரபாகரன், ஷெர்லி தாஸ் நிர்வாணமாக தோன்றும் காட்சிகளை நீக்கி விட்டார். மேலும் படத்தின் தலைப்பையும் வேலு பிரபாகரனின் காதல் கதை என்று மாற்றி விட்டார்.
படத்தில் ஆபாசமானதாக சென்சார் போர்டு கூறிய காட்சிகளையும் எடுத்து விட்டார். இதையடுத்து இப்படத்தை திரையிட சான்றிதழ் தந்து விட்டதாம் சென்சார் போர்டு.
இதையடுத்து முடங்கிப் போயிருந்த இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறதாம்.
நான் சொல்ல வந்த விஷயம் படத்தில் அப்படியேதான் இருக்கிறது. அது தொடர்பான சில காட்சிகளை மட்டுமே நீக்கியுள்ளேன். படம் அடுத்த மாதம் திரையிடப்படுகிறது என்று கூறியுள்ளார் பிரபாகரன்.


Click it and Unblock the Notifications











