வேலை தேடும் இளைஞரின் வலி.. சாதி, மதம், நிறம் என குவியும் தடைகள்.. வெளியானது 'ஸ்தாஹி' டீசர்!

கொச்சி: கேரளாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஸ்ரீஹரி இயக்கிய 'ஸ்தாஹி' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தனது ஒன்பது வயதிலேயே குறும்படங்களை இயக்க தொடங்கிய ஸ்ரீஹரி, தற்போது திரைப்படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார்.

கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் 3 குறும்படங்களை இயக்கி பாராட்டுக்களை அள்ளிய ஸ்ரீஹரிக்கு வெறும் 15 வயது தான் ஆகிறது.

இளம் இயக்குநர்

இளம் இயக்குநர்

சிறு வயது முதலே கேமரா செல்போனில் போட்டோ எடுப்பது, சின்ன சின்ன வீடியோக்கள் எடுப்பது என சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்த கொச்சியை சேர்ந்த ஸ்ரீஹரி, தற்போது 45 நிமிடங்கள் ஓடக் கூடிய 'ஸ்தாஹி' எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

வேலை தேடும் இளைஞனின் வாழ்க்கை

வேலை தேடும் இளைஞனின் வாழ்க்கை

கேரளாவில் போதைப் பொருளுக்கு அடிமையாகும் சிறுவர்கள் பற்றிய குறும்படத்தை முதன் முதலாக இயக்கி பாராட்டுக்களை அள்ளிய ஸ்ரீஹரி, தற்போது 'ஸ்தாஹி' (Sthaayi) எனும் தலைப்பில் வேலை தேடி அலையும் இளைஞர் அக்‌ஷய் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை திரைப்படமாக எடுத்துள்ளார்.

சாதி, மத, நிற தடை

சாதி, மத, நிற தடை

இன்றும் வேலை தேடி செல்லும் இளைஞர்களுக்கு சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் ஏன் நிறத்தின் அடிப்படையில் கூட நிதர்சனமாக நிகழும் ஏகப்பட்ட தடைகளை இந்த திரைப்படத்தின் மூலம் தோலுரித்துக் காட்ட இளம் இயக்குநர் ஸ்ரீஹரி முயற்சி செய்துள்ளார்.

ஸ்தாஹி டீசர் ரிலீஸ்

கடந்த லாக்டவுனில் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக பயன்படுத்திய ஸ்ரீஹரி இந்த படத்தை தற்போது வெற்றிகரமாக முடித்துள்ளார். ஸ்தாஹி படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. பிறந்தநாள் பரிசாக அப்பா வாங்கிக் கொடுத்த கேனான் 1500 வீடியோ கேமராவிலே இந்த படத்தை வெறும் 25 ஆயிரம் ரூபாய்க்குள் இயக்கி உள்ளார் ஸ்ரீஹரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X