2011இல் மங்காத்தா ரிலீஸ்.. அப்போது ரஜினி மருமகனாக இருந்த தனுஷ் என்ன சொல்லி இருக்காரு பாருங்க..

சென்னை: இப்போது ஒட்டுமொத்த இணையமும் பத்திக் கொண்டு எரிவதற்கு காரணம் வெங்கட் பிரபு தான். இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் The KINGMAKER என்று பதிவிட்டது மட்டும் தான் அவரது வேலை. மிச்சத்தை அஜித் ரசிகர்கள் தரமாக செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆமாம், அஜித் ரசிகர்களின் பல நாள் வேண்டுகோள், ஆசை எல்லாம் விரைவில் நனவாகப் போகிறது.

அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியான படம் மங்காத்தா. அஜித்தின் 50 வது படமாக உருவாகி வெளியான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. அதேபோல், படத்தை வெங்கட் பிரபு கதை திரைக்கதை அமைத்து இயக்கி இருந்தார். அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, மகத், விஜய் வசந்த், வைபவ், பிரேம் ஜி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. 100 நாட்களை கடந்து தியேட்டரிலேயே ஓடியது. மொத்த படமும் ரசிகர்களுக்கான பக்கா தியேட்டர் மெட்டீரியலாக இருந்தது. அதற்கு ஏற்ற வகையில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மொத்த படத்தையும் வில்லனிசத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அஜித் படங்களில் பல படங்களை ஓ.ஜி என்று பட்டியல் இடலாம். ஆனால் அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் படம் என்றால் அது மங்காத்தா படம் தான். அதேபோல் படத்தின் கதாநாயகன் வில்லன், வில்லன் தான் கதாநாயகன் என்ற அடிப்படையில் மங்காத்தா படம் முதல் இரண்டு இடங்களை தக்க வைக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் முரட்டு சம்பவம் இந்த படம்.

15 Years Back Dhanush X Page Post About Mankatha Release Trending Now For Ajith Mankatha Re Release
Photo Credit:

பொங்கலுக்கு ரீ ரிலீஸா?: இந்த படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. அஜித்தின் மற்ற எந்த படங்களுக்கும் இல்லாத வகையில் மங்காத்தா படத்திற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் உள்ளது. படம் வெளியான பின்னர் பிறந்த குழந்தைகளுக்கும் தற்போது 14, 15 வயதுக்குள் இருப்பார்கள். அந்த குழந்தைகளுக்கும் மாஸ் சினிமா என்றால் என்ன, சினிமாவில் ஸ்கிரீன் பிரசன்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைக்கும் படமாக மங்காத்தா இருக்கும் என்பதால், இதன் ரீ ரிலீஸ் கொண்ட்டாட்டம் தான்.

தனுஷ்: மங்காத்தா படம் வரும் பொங்கலுக்கே ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் பொங்கலுக்கு ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் படத்தை கொண்டாடி விடுவோம் என்று மரண வெயிட்டிங்கில் மீம்ஸ் போட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும்போது படம் வெளியான காலமான 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி, அதாவது படம் வெளியாவதற்கு முன்தினம் நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அப்போதைய மருமகனுமான தனுஷ் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவு இப்போது மீண்டும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அதாவது தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், " நாளைக்கு தல படம் ரிலீஸ். தெறிக்க விடுங்க. ஆல் த பெஸ்ட் டீம் மங்காத்தா. காட் பிளஸ்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X