twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு ரவுடியின் கதையா? ஒரு அரசியல்வாதியின் கதையா? காலம் கடந்து பேசும் கொக்கி குமாரு!

    |

    சென்னை : தனுஷின் மிரட்டலான நடிப்பில் உருவான புதுப்பேட்டை திரைப்படம் வெளியாகி இன்றோடு 15ஆண்டுகள் ஆகிறது.

    Recommended Video

    Pudhupettai movie review | Pudhupettai movie explained

    இதனை தனுஷின் ரசிகர்கள் #15yearsofpudhupettai என்ற ஹேஸ்டேக் தற்போது டிரண்டாகி வருகிறது.

    47 வயதில் ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் செல்பி எடுத்த நடிகை கஸ்தூரி.. என்னா அழகு என ஜொள்ளும் ஃபேன்ஸ்! 47 வயதில் ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் செல்பி எடுத்த நடிகை கஸ்தூரி.. என்னா அழகு என ஜொள்ளும் ஃபேன்ஸ்!

    மிகச்சிறந்த படைப்புகள், காலம் கடந்து வாழ்வதற்கான காரணமே, அது எந்த சூழலில் படித்தாலும், பார்த்தாலும் அக்கால சூழலோடு ஒத்துபோகும் என்பதால்தான். 15 ஆண்டுகள் கடந்த போதும் இந்த திரைப்படம் இன்னும் அனைவருக்கும் பிடித்த திரைப்படமாகவே உள்ளது.

    2006ம் ஆண்டு வெளியானது

    2006ம் ஆண்டு வெளியானது

    தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில், பாலக்குமாரின் தெறிக்கும் வசனத்தில் உருவான திரைப்படம் தான் புதுப்பேட்டை. இந்த படம் 2006 ம் ஆண்டு மே 26ந் தேதி வெளியாகி அதிரிபுதிரி செய்தது. ஒருவனின் வாழ்க்கையில், அவன் அடைந்த உயரத்தையும், அவன் விழுந்த விதத்தையும் துல்லியமாக காட்சிப்படுத்தியதில் செல்வராகவன் நிலைத்து நின்று இருப்பார்.

    கொக்கி குமாரு

    கொக்கி குமாரு

    இந்த படத்தில், தனுஷ் கொக்கி குமாராகவே வாழ்ந்து இருப்பார். கணக்கில்லா கொலைகள், எதிரிகளை ஒன்றை ஆளாக நின்று தாக்கும், வலிமை, உடல் வாகு அவரிடம் இருக்கிறதா? என்பதை எல்லாம் ஆராய்ந்தால் இல்லை என்று தான் சொல்லனும். ஆனால், ரவுடியாக ஒருவன் மாறுவதற்கு கட்டுக்கோப்பான உடல் ஒரு தேவையே இல்லை, முன் கோபமும், தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டுமென்ற பயமும்தான் தேவை என்பதை நடிப்பின் மூலம் அட்டகாசமாக வெளிப்படுத்தி இருப்பார் தனுஷ்.

    தனுஷின் உச்சகட்ட நடிப்பு

    தனுஷின் உச்சகட்ட நடிப்பு

    சினேகா குடும்பம் நடத்தும் தனுஷ், தாலி எடுத்துக் கொடுக்க சொன்ன இடத்தில் தாலியை சோனியா அகர்வாலின் கழுத்தில் கட்டும் காட்சியிலும்,

    சோனியா அகர்வாலை வலுக்கட்டாயமாக அடையும் காட்சியில் அதிகார போதை உச்சத்திலிருந்ததை தனுஷ் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருப்பார்.

    கைதட்டல்களை பெற்றார்

    கைதட்டல்களை பெற்றார்

    யாருக்கும் வளைந்து கொடுக்காத கொக்கி குமார், தன் குழந்தையைக் குப்பை தொட்டியில் வைத்துவிட்டு, 'அப்பா மாதிரி நீ ஆகக் கூடாது என்று சொல்லும் காட்சியில் பல கைத்தட்டல்களை பெற்று இருப்பார் கொக்கி குமாரு.

    அரசியல்வாதியின் கதையா?

    அரசியல்வாதியின் கதையா?

    புதுப்பேட்டை திரைப்படம் ஒரு ரவுடியின் கதையா? ஒரு அரசியல்வாதியின் கதையா? ஒரு குடும்பத் தலைவனின் கதையா? இல்லை. நம் ஒவ்வொருவரின் கதையா இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் சும்மா அட்டகாசமாக இருக்கும் இந்த திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் ஆகிறது. இதை தனுஷின் ரசிகர்கள் #15yearsofpudhupettai என்ற ஹேஸ்டேக்கை தற்போது டிரண்டாகி வருகிறது.

    English summary
    15 years of pudhupettai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X