உனக்கும் எனக்கும்...என்னது...இந்த படம் ரிலீசாகி அதுக்குள்ள 15 வருஷம் ஆகிடுச்சா ?

சென்னை : டைரக்டர் ராஜா இயக்கத்தில் 2006 ம் ஆண்டு ஜுலை 28 ம் தேதி ரிலீசான படம் உனக்கும் எனக்கும். முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்ட ரொமான்டிக் படமாக உருவாக்கப்பட்ட இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.

ஜெயம் ரவி, த்ரிஷா, ரிச்சா பல்லோட், பிரபு, மணிவண்ணன், பாக்யராஜ், கீதா, சந்தானம், கஞ்சா கருப்பு, விஜயக்குமார், தேஜாஸ்ரீ, கலாபாவன் மணி, மெளலி, மல்லிகா, காதல் தண்டபாணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

நீக்கப்பட்ட சம்திங் சம்திங்

நீக்கப்பட்ட சம்திங் சம்திங்

அண்ணன்- தங்கை பாசம், காதல் ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்ட இந்த படம் நுவ்வொஸ்தானன்டி நெனோடன்டானா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். முதலில் சம்திங் சம்திங்...உனக்கும் எனக்கும் என பெயரிடப்பட்ட இந்த படம், தமிழக அரசின் வரி விலக்கு விதிகளுக்கு உட்பட்டு, பிறகு ஆங்கில வார்த்தைகள் நீக்கப்பட்டன.

இரு மொழிகளில் நடித்த த்ரிஷா

இரு மொழிகளில் நடித்த த்ரிஷா

தெலுங்கிலும் ஹீரோயினாக த்ரிஷா தான் நடித்திருந்தார். த்ரிஷாவின் அண்ணன் ரோலில் நடிக்க பல நடிகர்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு இறுதியாக பிரபுவை ஒப்பந்தம் செய்தனர். இதே போல் ஜெயம் ரவியின் அப்பா ரோலில் நடிக்க முதலில், 1980 களில் டாப் ஹீரோவாக இருந்த நடிகர் மோகனிடம் தான் கேட்கப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பை அவர் மறுத்ததால் பாக்யராஜிற்கு அந்த வாய்ப்பு சென்றது.

சூப்பர்ஹிட் பாடல்கள்

சூப்பர்ஹிட் பாடல்கள்

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 6 பாடல்கள் அமைக்கப்பட்டது. அத்தனை பாடல்களும் செம ஹிட் ஆகின. தெலுங்கில் பயன்படுத்திய அதே ட்யூன் தான் தமிழுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆகாயம் இத்தனை நாள், கிளியே கிளியே, பூப்பறிக்க நீயும் போகாதே ஆகிய 3 பாடல்களை நா.முத்துக்குமார் எழுதி இருந்தார். கோழி வெடக் கோழி பாடலை விவேகாவும், சம்திங் சம்திங் பாடலை பா.விஜய்யும், உன் பார்வையில் பாடலை கபிலனும் எழுதி இருந்தனர்.

3வது முறையாக வென்ற கூட்டணி

3வது முறையாக வென்ற கூட்டணி

ஜுலை மாதம் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் பாராட்டுக்களையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றது. ராஜா, ரீமேக்கை தனக்கே உரிய ஸ்டைலில் படமாக்கி வெற்றி கண்டுள்ளார் என கூறப்பட்டது. ராஜா - ஜெயம் ரவி கூட்டணியில் மூன்றாவதாக உருவான இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது.

காதலர்கள் மனதை வென்றது

காதலர்கள் மனதை வென்றது

ஜெயம் ரவி - த்ரிஷா இடையேயான காதல் காட்சிகள் மிக அற்புதமாக அமைக்கப்பட்டது. இளைஞர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது . இளைஞர்கள் குறிப்பாக காதலர்களை குறிவைத்து வைக்கப்பட்ட டைட்டில் இந்த படத்திற்கு மற்றொரு ப்ளஸாக அமைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X