அம்பி, ரெமோ, அந்நியன்.. ஆக்டிங்கில் பிரித்து மேய்ந்த விக்ரம்.. டிரெண்டாகும் #15YrsOfMegaBBAnniyan
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படம் ரிலீசாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆவதை ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
பாய்ஸ் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன்.
நடிகர் விக்ரம், அம்பி, ரெமோ மற்றும் அந்நியன் என மூன்று அவதாரங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

15 வருஷம்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் மல்டிபிள் பெர்சனாலிட்டி டிசார்டர் எனும் பிரம்மாண்ட கான்செப்ட் அந்நியன் திரைப்படமாக வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆவதை ரசிகர்கள் #15YrsOfMegaBBAnniyan என்ற ஹாஷ்டேக்கில் அந்நியன் படம் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

சதா டிவீட்
டிவிட்டரில் சமீபத்தில் இணைந்த நடிகை சதா, அந்நியன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆவதை தனது கொண்டாடி வருகிறார். இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் விக்ரமுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய ரோல் அந்நியன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருட புராணம்
கருட புராணம் என்ற ஒன்றை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது இந்த படம் தான். இந்த படத்தில் அந்நியன் கொடுக்கும் ஒவ்வொரு தண்டனைகளும், படம் பார்ப்பவர்கள் மனதில் ஒரு வித பயத்தை உண்டு செய்தது தான் இந்த படத்தின் பலமே. பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக், அந்த தண்டனைகளை கண்டுபிடிக்கும் போர்ஷனும் மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்டு இருக்கும்.

அசத்தலான் நடிப்பு
வழக்கறிஞர் அம்பியாகவும், காதல் மன்னன் ரெமோவாகவும், அநியாயம் செய்பவர்களுக்கு தண்டனை வழங்கும் எமனாகவும் அந்நியன் படத்தில் நடிகர் விக்ரம் மூன்று கெட்டப்களில் பின்னி எடுத்திருப்பார். அதிலும், பிரகாஷ் ராஜ் உடன் அந்த விசாரணை அறையில் மாற்றி மாற்றி பேசி, நடிக்கும் காட்சி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

அந்நியன் 2
கோப்ரா, பொன்னியின் செல்வன், சியான் 60, துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணன் என பிசியாக இருக்கும் நடிகர் சியான் விக்ரம் மீண்டும் ஷங்கருடன் இணைந்து அந்நியன் 2ம் பாகத்தை செய்ய வேண்டும் என்பது சில ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அந்நியன் 2 படத்தில் விக்ரம் இப்படியொரு லுக்கில் இருந்தால் சூப்பராக இருக்கும் என்ற ஃபேன் மேட் டிசைனும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











