பிரபல ஹீரோ படத்துக்கு 16 ஏக்கரில் போடப்பட்ட பிரமாண்ட செட் அகற்றம்..தயாரிப்பாளர் போனி கபூர் தகவல்!

By

சென்னை: பிரபல ஹீரோ நடிக்கும் படத்துக்காக போடப்பட்டுள்ள பிரமாண்ட செட் அகற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்திப் படத் தயாரிப்பாளர் போனி கபூர். மறைந்த பிரபல நடிகை ஶ்ரீதேவியின் கணவரான இவர், தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்தார்.

அடுத்து அஜித் நடிக்கும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் பரபரப்பாக நடந்து வந்தது.

கால்பந்து வீரர்

கால்பந்து வீரர்

இந்நிலையில் இந்தியில் அஜய்தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தை தயாரித்து வருகிறார். இந்திய முன்னாள் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கைக் கதை இது. இதில், பிரபல அஜய் தேவகன், ரஹீமாக நடிக்கிறார். அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமானார். சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார்.

பிரியாமணி

பிரியாமணி

சில காரணங்களால் அவர் திடீரென நீக்கப்பட்டார். பிறகு நடிகை பிரியாமணி ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் தனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தெரிவித்திருந்தார். அமித் சர்மா இயக்கும் இந்தப் படத்துக்கு மும்பை புறநகர் பகுதியில் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வந்தது.

போனி கபூர்

போனி கபூர்

அப்போதுதான் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் 16 ஏக்கரில் போடப்பட்ட பிரமாண்ட அரங்கம் வீணானது. இப்போது மும்பையில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது. இதனால் அரங்கம் மேலும் வீணாகிவிடும் என்பதால், அதை பிரித்துவிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதைத் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மழை காலம்

மழை காலம்

அவர் கூறும்போது, இந்தப் பிரமாண்ட செட்டில் ஷூட்டிங் நடந்த போதுதான் கொரோனாவால் உலகம் பாதிக்கப்பட்டது. இதனால் பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்பை நிறுத்தினோம். இப்போது மழை காலம் தொடங்க இருப்பதால் அரங்கத்தை அகற்றுகிறோம். இதை மீண்டும் உருவாக்க இரண்டு மாதம் ஆகும்.

பெரும் நஷ்டம்

பெரும் நஷ்டம்

செப்டம்பரில் அரங்கத்தை மீண்டும் அமைக்க இருக்கிறோம். நவம்பரில் இங்கு ஷூட்டிங் நடக்கும். ஏற்கனவே கொல்கத்தா மற்றும் லக்னோவில் செட் அமைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் பாதுகாப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். செட்-டை அகற்றுவதன் மூலம் பெரும் நஷ்டம்தான் என்பதையும் அவர் கூறியுள்ளார். இதே போல அக்‌ஷய்குமார் நடிக்கும் பிருத்விராஜ் என்ற வரலாற்று படத்துக்காக போடப்பட்ட அரங்கமும் அகற்றப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X