மருத்துவமனையில் ஜெயசுதா!

அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லை காரணமாக அவர் இந்த வாரம் முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பிரபல நடிகையாக திகழ்பவர் ஜெயசுதா. ஒரு காலத்தில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தவர்.
ஆந்திராவில் செட்டிலாகிவிட்ட இவருக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி எம்எல்ஏ சீட் கொடுத்தார். அதில் ஜெயித்தும் விட்டார் ஜெயசுதா.
ஆனால் ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன்மோகன் ரெட்டி தனிக் கட்சி தொடங்கிய பிறகு, அவருடைய ஆதரவாளராக மாறிவிட்டார்.
நேற்று ஜெயசுதாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்றும் நாளையும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications