சிறுமி கற்பழிப்பு: நடிகை 'ஆவாரம்பூ' நந்தினி, கணவருக்கு முன்ஜாமீன்

ஆவாரம்பூ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நந்தினி. முன்பு செண்பகா என்ற பெயரில் இவர் நடித்து வந்தார். 50க்கும் மேற்பட்டுள்ள படங்களில் நடித்துள்ள நந்தினி இப்போது நடிப்பை விட்டு விட்டார். சென்னை சூளைமேடு வினோபாஜி தெருவில் கணவர் பாபு கிருஷ்ணாவுடன் வசித்து வருகிறார்.
கிருஷ்ணா, கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் ஆந்திராவைச் சேர்ந்த குமாரி உள்ளிட்ட இரு சிறுமிகள் வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக குழந்தைகள் நல ஆணையத்திற்குப் புகார் வந்தது. இதையடுத்து ஆணையத்தைச் சேர்ந்தவர்கள், போலீஸ் உதவியுடன் நந்தினி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது குமாரியும், இன்னொரு சிறுமியும் சித்திரவதை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை குழந்தைகள் நல ஆணையத்தினர் மீட்டனர். பான்யன் தொண்டு நிறுவனத்தில் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு விசாரித்தபோது சிறுமி குமாரி வீட்டு வாட்ச்மேனால் 6 முறை கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து நடிகை வீட்டு வாட்ச்மேன் சக்கரபாணி கைது செய்யப்பட்டார். நந்தினி மற்றும் கணவரையும் விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர்.
இதையடுத்து நந்தினி தம்பதிகள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதேபோல சக்கரபாணியும் ஜாமீன் கோரி மனு செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் திமுக எம்.பியான வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜரானார்.
சிறுமி கொடுத்த வாக்குமூலத்தை கொண்டு போலீசார் நடத்திவரும் விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைக்கக்கூடும். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு வக்கீல் வாதிட்டார்.
இதனை ஏற்று கொண்ட நீதிபதி தேவதாஸ், காவலாளி சக்ரபாணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நடிகை நந்தினி மற்றும் அவரது கணவர் பாபுகிருஷ்ணா தொடர்ந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கினார். வாரத்தில் 2 நாட்கள் சூளைமேடு காவல் நிலையத்தில் ஆஜராகி அவர்கள் இருவரும் கையெழுத்திட வேண்டும் என அவர் நிபந்தனை விதித்தார்.


Click it and Unblock the Notifications











