ஸ்னேகாவுக்கு எஸ்எம்எஸ் மூலம் திருமண தொல்லை-பெங்களூர் நபர் கைது

By Staff

Sneha
சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகை ஸ்னேகாவுக்கு கடந்த 6 மாதமாக எஸ்எம்எஸ் மூலம் மிரட்டல் விடுத்ததோடு, ஆபாசமான எஸ்எம்எஸ்களையும் அனுப்பி வந்த பெங்களூர் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரில் இருந்து ஸ்னேகாவின் செல்போன்களுக்கு கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து ஒரு நபர் எஸ்எம்எஸ்கள் அனுப்பி வந்தார்.

அதில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்னேகாவை நச்சரித்து வந்தார். ஆரம்பத்தில் இதை ஸ்னேகா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாரோ ரசிகர் தொல்லை தருகிறார் என்று விட்டுவிட்டார்.

ஆனால், கடந்த சில வாரங்களாக இரவு-பகலாக இடைவிடாமல் எஸ்எம்எஸ்களை அனுப்பியபடியே இருந்தார் அந்த நபர். இடையிடையே ஆபாச எம்எஸ்எம்களையும் அனுப்பினார்.

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டல் எஸ்எம்எஸ்களையும் அனுப்ப ஆரம்பித்தார்.

இதையடுத்து இது குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னரை ராஜேந்திரனை நேற்று நேரில் சந்தித்து இது குறித்து புகார் கொடுத்தார் ஸ்னேகா.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
எஸ்எம்எஸ் அனுப்பிய செல்போன் தற்போது சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த செல்போனை தொடர்பு கொண்ட போலீசார், ஸ்னேகா பேச விரும்புவதாகக் கூறி அவரை தியாகராய நகரில் உள்ள ஒரு காபி ஷாபுக்கு நேற்றிரவு வரவழைத்தனர்.

அங்கு வந்த அந்த நபரை போலீசார் பிடித்தனர். அவரது பெயர் ராகவேந்திரா (35). பெங்களூரில் அனுராகா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

ஸ்னேகாவுக்கு தொல்லை கொடு்த்ததை அவர் ஒப்புக் கொண்டதையடுத்து அவரை போலீசார் சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அவர் மீது பெண்கள் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தன்னை கன்னட படத் தயாரிப்பாளர் என்று கூறிக் கொண்டு, ஸ்னேகாவை வைத்து கன்னடப் படம் எடுக்க விரும்புவாதக் கூறி, அவரது தந்தையிடம் பேசியுள்ளார் ராகவேந்திரா. அப்போது ஸ்னேகாவின் செல்போனை வாங்கிச் சென்ற அவர் எஸ்எம்எஸ்களை அனுப்ப ஆரம்பித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X