வடிவேலு மீது விஜயகாந்த் மேனேஜர் தொடர்ந்த வழக்கு - ஒத்திவைப்பு

விஜயகாந்த் ரசிகர்களுக்கும், வடிவேலுவுக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு மோதல் மூண்டது. இது தொடர்பாக வடிவேலு தரப்பு மீது போலீஸில் விஜயகாந்த்தின் மேனேஜர் சதீஷ் குமார் புகார் கொடுத்தார்.
ஆனால் இது தொடர்பாக போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். விருகம்பாக்கம் போலீஸார், வடிவேலு மீது தான் கொடுத்த புகாரைப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வடிவேலு உள்ளிட்ட 14 பேருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வடிவேலு ஆஜராகவில்லை. இதையடுத்து திங்கள்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.
Comments
adjourned அடிதடி வழக்கு அரசியல் ஒத்திவைப்பு சினிமா வடிவேலு விஜயகாந்த் cinema clash tamilnadu vadilveu vijayakanth


Click it and Unblock the Notifications