வழக்கில் ஆஜராக மறுப்பதா?-மோகன்லாலுக்கு கோர்ட் கண்டிப்பு

By Staff

Mohanlal
திருவனந்தபுரம்: நீதிமன்ற விசாரணைக்கு வராத நடிகர் மோகன்லாலுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகர் மோகன்லாலுக்கு திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் அருகே நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு அருகே உள்ள இடம் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமானது. இதில் பத்மநாப பிள்ளை என்பவர் லாட்டரிக்கடை நடத்தி வந்தார்.

பிரபாகரன் தனது நிலத்தில் இருந்து கடையை காலி செய்யுமாறு பத்மநாப பிள்ளையிடம் கூறியுள்ளார். இதற்கு பத்மனாப பிள்ளை மறுத்தார்.

மேலும் அந்த இடத்தில் 15 ஆண்டுகளாக குடியிருப்பதால் அது தனக்கு சொந்தமானது என்று பத்மநாப பிள்ளை வழக்கு தொடர்ந்தார். அத்துடன் இதற்கு பக்கத்து இடத்தின் சொந்தக்காரரான மோகன்லால் சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு திருவனந்தபுரம் முதலாவது கூடுதல் முன்சீப் கோர்ட்டில் நடந்துவந்தது. இருதரப்பினரும் மோகன்லாலை சாட்சியாக கூறியதால் மோகன்லால் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

நிலத்தகராறு தொடபான இரு தரப்பினரோடும் தனக்கு தொடர்பில்லை என்றும் வழக்கில் தன்னை சேர்க்கக்கூடாது என்றும் மோகன்லால் தரப்பில் மறுப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே இவ்வழக்கில் 2 முறை நடந்த விசாரணைக்கும் மோகன்லால் ஆஜராகவில்லை.

இந்நிலையில் வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் மோகன்லால் ஆஜராகவில்லை.

இதனால், 'சாட்சியான மோகன்லால் நீதிமன்ற நடவடிக்கையை தவிர்ப்பது நல்லதல்ல. வரும் 17ம் தேதி அவர் விசாரணைக்காக கண்டிப்பாக ஆஜராக வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X