வருவதாக சொல்லி வராத பிபாஷா - ரூ. 5 கோடி கேட்கும் ஹோட்டல்

அந்த டெல்லி ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பிபாஷாவின் நடனம் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த நிகழ்ச்சிக்கு மளமளவென டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.
டான்ஸ் ஆடுவதற்காக பெரும் தொகையை ஹோட்டல் நிர்வாகம் அட்வான்ஸ் ஆக கொடுத்து வைத்திருந்தது. இந்த நிலையில் திடீரென கடைசி நிமிடத்தில் வர முடியாது என்று கூறி விட்டார் பிபாஷா.
இதையடுத்து கடுப்பான ஹோட்டல் நிர்வாகம் பிபாஷாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கடைசி நிமிடம் கூடுதலாக ரூ.30 லட்சம் கேட்டு நிர்ப்பந்தப்படுத்தி விருந்துக்கு வர மறுத்து விட்டதால், பெரும் நஷ்டமும், களங்கமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக ரூ. 45 லட்சம் வரை செலவிட்டோம். எனவே பிபாஷா பாசு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications