twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நண்பா... 2 இடியட்ஸ்!'

    By Shankar
    |

    3 இடியட்ஸ் படத்தை தமிழில் நண்பன் என்ற பெயரில் ஷங்கர் இயக்குவது தெரிந்ததே. இப்போது தமிழில் கிட்டத்தட்ட இதே பெயரில் ஒரு படம் தயாராகிறது. படத்துக்குப் பெயர் நண்பா - 2 இடியட்ஸ்.

    ஷங்கர் படத்துக்குப் போட்டியோ என்று யோசிக்க வைக்கும்படியாக தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குபவர் பிரபல இயக்குநர் கே எஸ் அதியமான்.

    சாந்தனு, நகுல் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். கொமரம் புலி படத்தின் நாயகியாக நடித்த நிகீஷா படேல் நண்பா - 2 இடியட்ஸ் படத்தின் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

    ஷங்கர் படத்துக்குப் போட்டி மாதிரி தலைப்பு உள்ளதே.. ஏட்டிக்குப் போட்டியா என்று இயக்குநர் அதியமானிடம் கேட்டோம்.

    "அப்படியெல்லாம் இல்லை. எனக்கு அதற்கான அவசியமும் இல்லை.இந்த தலைப்பு ஏற்கெனவே நான் தேர்வு செய்து வைத்தது. இந்தப் படத்தின் கதைக்கு மிகவும் பொறுத்தமானதும் கூட", என்றார்.

    English summary
    K S Athiyaman, one of the talented director in Tamil is all set to launch his new film after Thoondil. Titled Nanba - 2 Idiots, the film is about the friendship of 2 good friends from the childhood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X