தீபாவளி.. 5 காட்சிகளுக்கு அரசு அனுமதி

தீபாவளியையொட்டி 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை திரையரங்குகளில் 5 காட்சிகள் படங்கள் திரையிட அரசு அனுமதி தந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர திரையரங்குகளுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 19, 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி (அதாவது 5வது காட்சி) நடத்திக் கொள்ள அனுமதி தந்துள்ளது.

மேலும் அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை என்பதால் அந்த தினங்களிலும் அதிகப்படியாக ஒரு காட்சி (5வது காட்சி) நடத்திக் கொள்ளலாம்.

அதேபோல் நடமாடும் திரையரங்குகளுக்கு (tourign talkies) வரும் 19, 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மேட்னி காட்சிகள் நடத்திக் கொள்வதற்கும் 17 மற்றும் 18 தேதிகளில் காலை காட்சிகள் நடத்திக் கொள்வதற்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X