சாட்சிகள் ஆப்சென்ட்-குஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு

தமிழக பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு இழிவாக பேசியதாக அவர் மீது மேட்டூரை சேர்ந்த வக்கீல் முருகன் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேட்டூர் குற்றவியல் நீதிமன்றத்தில் (எண்-2) வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகை குஷ்பு நேரில் ஆஜராகி திரும்பும்போது அவர் மீது அழுகிய தக்காளி, முட்டை, செருப்பு போன்றவை வீசப்பட்டன.
இது குறித்து மேட்டூர் தாசில்தார் மேட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் பா.ம.க. பிரமுகர் அறிவழகன் உள்பட 40 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது குஷ்புவை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று அரசு வக்கீல் கார்த்திகேயன் கூறினார்
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் வழக்கின் முக்கிய சாட்சியான குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
நேற்று மேட்டூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது சாட்சிகள் யாரும் வராததால், வழக்கை மாஜிஸ்திரேட்ட் அக்டோபர் 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications











