பிரபுதேவா-நயனதாரா கல்யாணத்திற்கு மனைவி ரமலத் சம்மதம்?

By Sudha

Ramalath
தனது கணவர் பிரபுதேவா, நடிகை நயனதாராவை கல்யாணம் செய்து கொள்ள அவரது மனைவி ரமலத் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து கேரளா அல்லது திருப்பதியில் வைத்து எளிமையான முறையில் இந்தக் கல்யாணத்தை முடித்துக் கொள்ள பிரபுதேவாவும், நயனதாராவும் முடிவு செய்துள்ளனராம்.

நயனதாராவை காதலிக்கிறேன், கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறேன் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் பிரபுதேவா. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமலத் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைகளில் குதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இப்போது அவர் தனது கணவரின் 2வது கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரமலத்தை சம்மதிக்க வைப்பதற்காக பெரும் தொகை ஒன்றை ரமலத் பெயரில் பிரபுதேவா வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பணத்தைக் கொடுத்தாலும் ரமலத் சம்மதிப்பாரா என்று பிரபுதேவா-நயனதாராவுக்கு சந்தேகம் இருந்ததாம். ஆனால் அவர் கல்யாணம் செய்ய சம்மதித்தது அவர்களுக்கு இனிய அதிர்ச்சியாகி விட்டதாம்.

இதையடுத்து கல்யாணத்தை வேகமாக முடிக்க திட்டமிட்டுள்ளார் பிரபுதேவா. முதல் கல்யாணத்தைப் போலவே தனது 2வது கல்யாணத்தையும் மிகவும் ரகசியமாக, எளிமையாக வைத்துக் கொள்ளப போகிறாராம்.

திருப்பதி அல்லது கேரளாவில் ஏதாவது ஒரு கோவிலில் வைத்துக் கல்யாணம் நடக்கும் என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X