சினிமா ரேஸில் 100 நாட்களைத் தொடப் போகும் கவர்ச்சிக் குதிரை... “ரேஸ் குரம்”!

சென்னை: ஸ்ருதிஹாசனின் கவர்ச்சிப் போஸ்டர்களால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய "ரேஸ் குரம்" (ரேஸ் குதிரை) தெலுங்குப் படம், 26 தியேட்டர்களில் 100 நாட்களை நெருங்கி வருகிறது.

அல்லு அர்ஜூன் மற்றும் ஸ்ருதிஹாசன், பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான மாஸ் ஆக்‌ஷன் பிலிம் "ரேஸ் குரம்".

சுந்தர் ரெட்டியால் இயக்கப்பட்ட இப்படத்தில் பல நட்சத்திரங்கள் வரிசை கட்டி நடித்துள்ளனர்.

மெகா ஹிட் ஆக்‌ஷன்:

மெகா ஹிட் ஆக்‌ஷன்:

இந்த மெகா ஆக்‌ஷன் பிலிம்தான் தற்போது 100 நாட்களை நெருங்கி ஆந்திரா மற்றும் தெலுங்கானவில் 26 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

100 நாட்களை நோக்கி:

100 நாட்களை நோக்கி:

வரும் 19 ஆம் தேதி வந்தால் இப்படத்தின் 100ஆவது நாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட வேண்டியதுதான் படக்குழுவினர்.

50 கோடி ரூபாய் வசூல்:

50 கோடி ரூபாய் வசூல்:

சினிமா ரேஸில் கிட்டதட்ட 50 கோடி ரூபாய் வசூலில் கல்லா கட்டியுள்ளது ரேஸ் குரம். இயக்குனர் சுந்தர் ரெட்டியின் டாப் 5 பிளாக் பஸ்டர் சினிமா லிஸ்டில் இந்தப் படமும் இணைந்துள்ளது.

வெற்றிக்கு பின்புலம் இவர்கள்தான்:

வெற்றிக்கு பின்புலம் இவர்கள்தான்:

அல்லு அர்ஜூனின் எனர்ஜிடிக் நடிப்பு, ஸ்ருதிஹாசனின் அள்ள அள்ளக் குறையாத கவர்ச்சி, பிரம்மானந்தத்தின் கலக்கல் காமெடி, அதிரடி இசை, அழகான ஒளிப்பதிவு, முக்கியமாக நம்ம பிரகாஷ் ராஜ் செல்லத்தால்தான் படம் இப்படி ஒரு வெற்றியை அடைந்துள்ளது என்று பூரித்துப் போகின்றனர் படக் குழுவினரும், மற்ற சினிமா விமர்சகர்களும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X