Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கண்ட இடத்தில் தொட்டார், அசிங்கமாக பேசினார், தடவினார்..: பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்
Recommended Video
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் மீது பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன், தி பக்கெட் லிஸ்ட், இன்விக்டஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளவர் மார்கன் ஃப்ரீமேன். 80 வயதாகும் அவர் சுமார் 50 ஆண்டுகளாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் 16 பெண்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
மார்கன்
மார்கன் ஃப்ரீமேன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 8 பெண்களும், அவர் பிற பெண்களிடம் தவறாக நடந்தபோது அதை பார்த்ததாக 8 பெண்களும் தெரிவித்துள்ளனர்.
பாலியல் தொல்லை
கோயிங் இன் ஸ்டைல் படத்தில் ப்ரொடக்ஷன் உதவியாளராக பணியாற்றியபோது பல மாதங்களாக மார்கன் ஃப்ரீமேன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்கர்ட்
படப்பிடிப்பு தளத்தில் என் அனுமதி இல்லாமல் மார்கன் ஃப்ரீமேன் என் பின்பக்கத்தை தொட்டு தடவுவார். உள்ளாடை அணிந்திருக்கிறாயா என்று கேட்டு அடிக்கடி என் ஸ்கர்ட்டை தூக்க முயன்றார். அவர் ஸ்கர்டை தொட்டதும் நான் விலகிச் சென்றுவிடுவேன். அவரின் தொல்லையை பார்த்த நடிகர் ஆலன் ஆர்கின் இதை உடனே நிறுத்துமாறு கூறியதும் மார்கன் அதிர்ச்சி அடைந்தார் என்கிறார் இளம் பெண்.
நடிகர்
நவ் யூ சீ மி படத்தின் மூத்த ப்ரொடக்ஷன் தொழிலாளி பெண் கூறியபோது மார்கன் ஃப்ரீமேன் வருகிறார் என்றால் பெண்கள் யாரும் மார்பகம் தெரியும்படியோ, பின் பக்கம் தெரியும்படியோ, டைட்டான உடையோ அணியவே கூடாது என்றார்.
மன்னிப்பு
16 பெண்கள் புகார் தெரிவித்த பிறகு மார்கன் ஃப்ரீமேன் மன்னிப்பு கேட்டுள்ளார். நான் யாரையும் அசவுகரியமாக ஃபீல் பண்ண வைக்க மாட்டேன் என்பதை என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். என்னால் அசவுகரியமாக ஃபீல் பண்ணியவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் வேண்டும் என்று செய்யவில்லை என்று மார்கன் ஃப்ரீமேன் தெரிவித்துள்ளார்.