16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா... தமிழ் படங்களுக்கு அழைப்பு!
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தமிழ் படங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தமிழ் படங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 வருடங்களாக சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. 16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் மாதம் 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் சிறந்த தமிழ் படம், இரண்டாவது சிறந்த தமிழ் படம், நடுவர்களின் சிறப்பு விருது ஆகிய தலைப்புகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு சென்னை சர்வதேச திரைப்பட விழாக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
2017 அக்டோபர் 16ல் இருந்து 2018 அக்டோபர் 15ம் தேதிக்குள் சான்றிதழ் பெறப்பட்ட படங்கள் தான் இந்த விழாவில் பங்குபெற தகுதியானவை. நவம்பர் 10ம் தேதிக்குள் இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Comments


Click it and Unblock the Notifications