செப்டம்பரில் ரிலீசாக வரும் 17 படங்கள்... தியேட்டர்கள் கிடைக்காததால் கடும் போட்டி!

By Shankar

சென்னை: இந்த செப்டம்பர் மாதம் மட்டும் 17 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இவற்றுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் கடும் போட்டி நிலவுகிறது.

படங்கள் ஓடவே இல்லை என தயாரிப்பாளர்கள் புலம்பிக் கொண்டிருந்தாலும், ஆண்டு தோறும் தயாராகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

வாரத்துக்கு குறைந்தது 4 அல்லது 5 படங்கள் வெளியாகின்றன.

லாபம்தான்

லாபம்தான்

உண்மையில் சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு படம் எடுப்பது பெரிய பிரச்சினையாக இல்லை. ஹீரோக்கள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், கிடைக்கிற டெக்னீஷியன்களை வைத்து டிஜிட்டலில் எடுத்துவிடுகிறார்கள். இந்தப் படங்களால் அவர்களுக்கு நஷ்டமும் ஏற்படுவதில்லை. தொலைக்காட்சி மற்றும் அரசின் சலுகைகளால் வெளியீட்டுக்கு முன்பே ஒரு தொகை கிடைத்துவிடுகிறது. அதன்பிறகு ரிலீசாகி ஒரு வாரம் ஓடினாலும் லாபம்தான்.

இந்த செப்டம்பரில்

இந்த செப்டம்பரில்

இம்மாத வெளியீடாக மட்டும் 17 படங்கள் திரைக்கு வருகின்றன. விஷால், ஆர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த படங்களும் இவற்றில் அடங்கும்.

மதகஜராஜா

மதகஜராஜா

வெளியாகும் படங்களின் விவரம்: விஷால் நடித்த மதகஜராஜா, சிவார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த ஆர்யா சூர்யா, ஷாம் நடித்த 6, பிரசன்னா நடித்த கல்யாண சமையல் சாதம், தினந்தோறும் நாகராஜ் டைரக்ஷனில், ஜெயன்-காயத்ரி நடித்த மத்தாப்பூ...

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

புதுமுகங்கள் நடித்த மவுனமழை, அஞ்சல் துறை, காமெடிப் படமான கோப்பெருந்தேவி, சுப்பு இயக்கத்தில் சுட்ட கதை, மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நவீன் இயக்கத்தில் மூடர் கூடம்

ராஜா ராணி

ராஜா ராணி

ஆர்யா - நயன்தாரா நடித்த ராஜா ராணி, பரத் நடித்த கில்லாடி, பிரபுதேவா களவாடிய பொழுதுகள், ஷிவா நடித்த யா யா, விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் வெளியாகின்றன.

தியேட்டர்கள் இல்லை

தியேட்டர்கள் இல்லை

ஒரே மாதத்தில் 17 படங்கள் திரைக்கு வர இருப்பதால், தியேட்டர்களை பிடிக்க கடும் போட்டி நடக்கிறது. சரியானபடி தியேட்டர்கள் கிடைக்காத பட்சத்தில், சில படங்களை தள்ளிப் போடவும் முடிவு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X